இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஆலோசனையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்தில் வயது 48 நபர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார்.
அக்கால பகுதியில் ஊரில் உள்ள கோயில் ஒன்றின் பிரச்சனையில் தலையிட்டு உள்ளார். அதன் போது வெளிநாட்டில் வசிக்கும் நபரொருவர், குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோயில் பிரச்சனை தொடர்பில் வாக்கு வாதப்பட்டுள்ளார். அத்துடன் , கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் 12 நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று கோயிலில் பிரச்சனையில் தலையிட்டவரின் வீட்டுக்குள் புகுந்து, சரமாரியாக வாளினால் வெட்டியுள்ளனர்.
அதனை தடுக்க முற்பட்ட வயோதிப தாய் தந்தையையும் தாக்கியுள்ளனர்.அதன் பின்னர் அங்கிருந்து தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர்.
அதையடுத்து வாள் வெட்டுக்கு இலக்கான நபர் அங்கிருந்து மீட்கப்பட்டு வரணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸ் விசாரணையின் போது தாக்குதலுக்கு இலக்கானவர் வாக்குமூலம் அளிக்கையில் , தான் கோயில் பிரச்சனையில் தலையிட்டமை தொடர்பில், வெளிநாட்டில் இருந்து ஒருவர் தன்னை தொலைபேசியில் மிரட்டியாதகவும் , அவரே இங்கே கூலிக்கு வாள் வெட்டுக்குழுவை அமர்த்தி தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment