ஜோதிடம்

கனிவான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கன்னி ராசி அன்பர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகளின் மூலமும், புதுமையான வியூகங்களின் மூலமும் திறமைகளை வெளிப்படுத்தி தங்களுக்கென புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் பலரின் மனதையும், எண்ணத்தையும் ஈர்ப்பீர்கள்.

பொருளாதாரம் :

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதாரத்தில் முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சிறு வியாபார பணிகளில் தடைகள் ஏற்பட்டாலும், அதற்கான பலன்கள் உண்டாகும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு :

அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களும், பாராட்டுகளும் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் பெரும்போக்கான சிந்தனைகளின் மூலம் பலருடைய ஆதரவை பெறுவீர்கள். மறைமுகமான திறமைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கூட்டு வியாபாரப் பணிகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை மேம்படும்.

அரசியல்வாதிகளுக்கு :

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் நுட்பமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் வெற்றி கொள்வீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சாதுர்யமான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளையும், ஆதரவையும் பெறுவீர்கள்.

நன்மைகள் :

புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை தகர்த்தெறிந்து, எண்ணிய இலக்கை நோக்கி சென்றடைந்து வெற்றி வாகை சூடும் வருடமாக பிறக்கின்ற புத்தாண்டு அமையும்.

கவனம் :

பேச்சுக்களில் நிதானமும், எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படுதலும் அவசியமாகும்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர ஆரோக்கியம் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும்.

Recent posts

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுக்கூடிய தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. பலம்...
Thamil Paarvai

இருவிதமான திருமண தோஷங்கள்

திருமணம் பார்க்கும்போது இருவிதமான தோஷங்கள் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகள்1.செவ்வாய் தோஷம்2.ராகு-கேது தோஷம் செவ்வாய் தோஷம் : செவ்வாய் தோஷம் என்னவென்பதை அறிந்து கொண்டால் அதற்கு...
Thamil Paarvai

திருமணமும், ஜாதகமும்…!!

திருமணம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், அதில் நடைபெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும், நாம் இதுவரை விரிவாக பார்த்தோம். இனி திருமணத்தில் மணமக்களின் ஜாதகத்தின் முக்கியத்துவம் யாது...
Thamil Paarvai

நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய இலக்கை அடையும் திறமை கொண்ட மகர ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மகர ராசி அன்பர்களுக்கு மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், நுட்பமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும் காலமாக அமையும்....
Thamil Paarvai

சவாலான செயல்களையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மீன ராசி அன்பர்களுக்கு தோற்றப்பொலிவில் புதிய மாற்றத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். குடும்ப விவரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள்...
Thamil Paarvai

பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கும்ப ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கும்ப ராசி அன்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதன் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களை...
Thamil Paarvai

எதற்கும் கலங்காத நெஞ்சமும்… எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கடக ராசி அன்பர்களுக்கு புதுவிதமான அனுபவங்களை உருவாக்கக்கூடிய காலக்கட்டங்களாக அமையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான தனவரவுகளை பெறுவீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்திருந்த சில...
Thamil Paarvai

எப்பொழுதும் குறிக்கோளுடன் செயல்படக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது விருச்சிக ராசி அன்பர்களுக்கு எண்ணங்களில் புத்துணர்ச்சியையும், செயல்பாடுகளில் துரிதத்தையும் உருவாக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது நல்லது. சில நேரங்களில் பேச்சுக்களில் அதிகாரத்தன்மை அதிகரிக்கும். பொருளாதாரம்...
Thamil Paarvai

சூழ்நிலைகளை அறிந்து சாதுர்யமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்திறனும், புத்திசாலித்தனமும்...
Thamil Paarvai

Leave a Comment