இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு..அடிக்கல் நாட்டுவிழா! பணிகள் விரைவில் துவங்க உள்ளது

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய திட்டத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டினார். இதனால், நிலைய கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கோயம்பேடில், வெளியூர் பஸ்களால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலுாரில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது.இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, 80 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. ஆனால், இங்கு கற்காலத்தை சேர்ந்ததாக கருதப்படும், பாரம்பரிய சின்னங்கள் இருப்பதால், இப்பகுதியில் கட்டுமான திட்டங்களுக்கு, தொல்லியல் துறை தடை விதித்து இருந்தது.இதனால், புதிய பஸ் நிலையத்திற்கு சிக்கல் ஏற்பட்டது.

தொல்லியல் துறை விதிப்படி, பாரம்பரிய சின்னம் இருப்பதாக கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து, முதல்இ 100 மீட்டர் வரையிலான பகுதியில், கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ள முடியாது.இதிலிருந்து அடுத்தஇ 200 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில், கட்டுமான பணிக்கு, தொல்லியல் துறை தடையின்மை சான்று பெறுவது கட்டாயம்.இதன் அடிப்படையில், பஸ் நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியில், 200 மீட்டர் வரம்புக்குள் வரும் இடத்தில், கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, தடையின்மை சான்று கோரி, சி.எம்.டி.ஏ., மத்திய தொல்லியல் துறையிடம் விண்ணப்பித்தது.இதில், தேசிய பாரம்பரிய சின்னங்கள் ஆணையம், சில நிபந்தனைகள் அடிப்படையில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு, தடையின்மை சான்று வழங்கியது.இது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

கிளாம்பாக்கத்தில், பாரம்பரிய சின்னம் இருக்கும் இடத்தில் இருந்து முதல்இ 100 மீட்டர் பகுதியை, பசுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்.அங்கு பொதுமக்களுக்கு, பாரம்பரிய சின்னம் குறித்த தகவல்கள் அளிக்கும் வகையில், வழிகாட்டி மையத்தை அமைக்க வேண்டும்.தொல்லியல் வல்லுனர்கள் மேற்பார்வையில், இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், 200 மீட்டர் வரம்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டு மானங்களின் உயரம், 34 மீட்டருக்குள் இருக்க வேண்டும்.இந்த நிபந்தனைகள் அடிப்படையில், புதிய பஸ் நிலைய பணிகளுக்கு, தேசிய பாரம்பரிய சின்னங்கள் ஆணையம், தடையின்மை சான்று அளித்துள்ளது. இவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய திட்டத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம், காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டினார். இதனால், நிலைய கட்டுமான பணிகள், விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment