குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாபுபா மானக் என்பவர் வெற்றி பெற்றவர். இவரது வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் பாஜக வேட்பாளர் மானக் குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும் அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மானக்கின் வேட்பு மனுவில் தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மக்கள் அளித்த தீர்ப்பின்படி மானக்கை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிஇ துவாரகா எம்எல்ஏ பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை குஜராத் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
previous post
Recent posts
ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்
தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்
“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு
“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.
வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19
2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்
2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்
தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்
IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...




