ஆரோக்கிய சமையல்

கேரட் அல்வா சுவையாக செய்ய வேண்டுமா ?

👉 முறுக்கு, மிக்ஸர் போன்ற பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.

👉 இனிப்பு சோமாஸ் செய்யும்போது பூரணத்தில் சிறிது பால் பவுடர் கலந்து செய்தால் அருமையான சுவை கிடைக்கும்.

👉 ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

👉 ஓட்ஸ் லட்டு பிடிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்தால் அருமையாக இருக்கும்.

👉 அரிசியில் பலகாரங்கள் செய்யும் போது அரிசியை களைந்து, காய வைத்து அரைத்து, பலகாரங்கள் செய்தால், பலகாரங்கள் நல்ல சுவையுடன், உடையாமல் இருக்கும்.

👉 காராபு+ந்தி தேய்க்கும் பொழுது எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உருண்டையாக வரும்.

👉 கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

👉 கேசரி கிளறும்போது முந்திரி, பாதாம், பிஸ்தா பொடித்து வறுத்துச் சேர்க்கலாம். அல்லது பாதாம் பவுடர் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.

👉 முறுக்கு மாவு பிசையும் பொழுது சிறிது சிறிதாக மாவு எடுத்து பிசைந்து செய்தால் வெள்ளை நிறத்தில் சிவக்காமல் இருக்கும்.

👉குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கட் ரெடி.

Recent posts

அவல் பால் கொழுக்கட்டை

அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- அவல்...
Thamil Paarvai

உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா….

உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன??? வேறு சில பயன்பாடுகளுக்கும் உப்பு பயன்படுகிறதே, அதனை அறிவோமா??  அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால்,...
Thamil Paarvai

மாங்காய் மற்றும் மாம்பழத்தின் மருத்துவ பயன்கள் .

👉 சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. 👉 அதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு...
Thamil Paarvai

மணத்தக்காளி கீரை சட்னி மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்

தேவையான பொருட்கள் மணத்தக்காளிக் கீரை  – 2 பிடிமிளகு –  ¼ டீஸ்பூன்சீரகம்  – ¼ டீஸ்பூன்பச்சை மிளகாய் -1 (விரும்பினால்)சின்ன வெங்காயம்  – 10தேங்காய்த் துருவல்...
Thamil Paarvai

சத்தான காலை உணவு அவல் பருப்பு உப்புமா

தேவையான பொருட்கள் : அவல் – அரை கப்பாசிப்பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் – 2கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்கடுகு – கால் டீஸ்பூன்உடைத்த உளுந்து...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்.

👉சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

சுவையான கஞ்சி ரமலான் காலத்தில் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கும்

நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி. நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும். நோன்புக்கஞ்சிதேவையான பொருட்கள்: பச்சரிசி...
Thamil Paarvai

மீன் பொரிக்கும் போது கவனிக்க வேண்டியவை.

👉 மீனுக்கு மசாலா போடும் போது அதில் புளி தண்ணீர் அல்லது தக்காளி இரண்டை நறுக்கி, அதன் சாறு மட்டும் பிழிந்து, அதில் மசாலாவை சேர்த்து கலக்கி,...
Thamil Paarvai

சமையல் டிப்ஸ்

👉 ரவா லட்டு செய்யும்போது அதனுடன் அவலையும் பொடித்து சிறிது நெய்யில் வறுத்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து செய்தால் ரவா லட்டு சுவையாக...
Thamil Paarvai

Leave a Comment