Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கொத்தாய் பலியான பலர்: பற்றி எரியும் மருத்துவமனை -ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்து கோர விபத்து.

ஈராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உருளைகள் வெடித்ததில் பலர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்தாதில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை இரவு இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் உருளைகள் வெடித்ததால் அந்த மருத்துவமனை தீப்பிடித்து எரிந்துள்ளது.

தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் ஈராக் அதிகாரிகள் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிடப்படவில்லை.

மருத்துவமனைக்குள் குறைந்தது ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் நாடு கடுமையான கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் உள்ளது. தினசரி இப்போது சராசரியாக 8,000 பேர்களுக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இது கடந்த ஆண்டு நாட்டில் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து மிக அதிகமாகும். தடுப்பூசி போடுமாறு அரசாங்கம் தொடர்ந்து பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது,

ஆனால் சுகாதார அமைப்பு மற்றும் குறிப்பாக தடுப்பூசிகளின் பரவலான அவநம்பிக்கை காரணமாக மக்கள் கண்டுகொள்வதில்லை என்றே தெரிய வந்துள்ளது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment