ஆரோக்கியம் பொது மருத்துவம்

சருமத்திற்கு பொலிவைத் தரும் கேரட்!!

இயற்கையாகவே இனிப்புத் தன்மையுடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த கேரட்டை உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் ஏற்படாது. இப்போது இந்த கேரட்டின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கு காண்போம்.

👰 கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடும் போது நமக்கு அதிகளவில் சத்துக்கள் கிடைக்கிறது.

👰 கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.

👰 கேரட்டில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

👰 தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம்.

👰 கேரட் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கிறது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

👰 கேரட் சாறுடன், எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.

👰 பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

👰 பெண்கள் அடிக்கடி கேரட் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வராமல் காத்துக் கொள்ளலாம்.

👰 கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதன் மூலம் மார்பகப் புற்றுநோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம்.

👰 கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடுகிறது.

👰 கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து தோல் சுருக்கத்தை நீக்குகிறது.

👰 உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைத்து முகம் பொலிவு பெறும்.

👰 மேலும், ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

👰 கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பு+ன் தனியா பொடி, கொத்தமல்லித்தழை, புளிப்பில்லாத தயிர் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். மேலும்        எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

Recent posts

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

அவல் பால் கொழுக்கட்டை

அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- அவல்...
Thamil Paarvai

சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள்

மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது...
Thamil Paarvai

இந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம் !!

இன்று பலரும் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்வதற்காக பலவகை அழகுச்சாதனப் பொருட்களை தேடி வாங்குகிறார்கள். இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். 👧 செயற்கையான அழகுச்சாதனப்...
Thamil Paarvai

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள் !!

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள்....
Thamil Paarvai

Leave a Comment