உலகம் செய்திகள் புதிய செய்திகள்

டிரம்ப் பேட்டி: புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக புல்வாமா தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநில புல்வாமா அருகே நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதாகவும், மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை நிறுத்த தற்போது முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதலில் அதிக பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதனை நிறுத்த முயற்சி மேற்கொள்வதாகவும், தீவிரவாதத்தை தடுக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் பேட்டியளித்தார்.இந்த சம்பவத்தில் இந்தியா ஒரு வலுவான காரணத்தை பார்ப்பதாகவும் இந்த தாக்குதலில் இந்தியா கிட்டத்தட்ட 50 பேரை இழந்தது என்றும் அதனை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

எனது நிர்வாகம் இரு நாடுகளிலும் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்,நிறைய பேர் இருக்கிறார்கள், இது மிகவும் மென்மையான சமநிலையை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிறைய பிரச்சினைகள் உள்ளன என்று ட்ரம்ப் தெரிவித்தார்.பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.7இ100 கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நல்ல உறவு இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment