இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தமிழக அமைச்சர் தி பேமிலி மேன் – 2 தொடரை தடை செய்யுமாறு அவசர கடிதம்

சென்னை அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாக உள்ள, ‘தி பேமிலி மேன் – 2’ தொடரை தடை செய்யும்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தி பேமிலி மேன் – 2′ என்ற, ஹிந்தி தொடரின் முன்னோட்டம், ஈழத் தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

தமிழ் பண்பாட்டை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடரை, எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளை கொண்டது எனக் கருத முடியாது. தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை, பயங்கரவாதியாக காட்சிப்படுத்தி உள்ளது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடி தாக்குதல்.

இதுபோன்ற விஷமத்தனமான பரப்புரையை, யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த தொடரின் முன்னோட்டம், ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே, பெரும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது.

இத்தொடரானது, ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது, தமிழக தமிழர்களின் உணர்வுகளையும், பெருமளவில் புண்படுத்தி உள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும்.

அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை, தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Recent posts

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணமான இரு முக்கிய புள்ளிகள்

தியாக தீபம் திலீபன் எனும் பெயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் அகிம்சைப் போராட்டத்தின் உச்ச அடையாளமாகப் பதிந்துள்ளது. 1987ஆம் ஆண்டு, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம்...
Thamil Paarvai

டொராண்டோ மேயர் தேர்தல் 2026: முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

டொராண்டோ நகர முதல்வர் தேர்தல் அக்டோபர் 26, 2026 அன்று நடைபெறவுள்ளது. தற்போதைய முதல்வர் ஒலிவியா சௌ, நகரசபை உறுப்பினர் பிராட் பிராட்போர்ட், முன்னாள் மத்திய அமைச்சர்...
Thamil Paarvai

Leave a Comment