இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழர்களுடன் மோத வேண்டிய தேவையில்லை: பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

யுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக்கில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு மாகாணமே யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது. முழுமையான அழிவை எதிர்கொண்டது. ஆனால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உயிரிழப்புகள் சம்பவித்தன. எமது ஜனாதிபதியொருவர் உயிரிழந்தார். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார். எமது கட்சியில் பலர் உயிரிழந்தனர். அனைவரும் உயிரிழந்தமையினாலேயே நான் தலைமைத்துவத்திற்கு வந்தேன்.

அது கடந்த காலம். எனவே, தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் எனக்கில்லை. ஐ.தே.க.வினர் மாத்திரமின்றி தமிழ் தலைமைகள் பலரும் உயிரிழந்துள்ளனர். அனைவரும் யுத்தத்தினால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, கடந்த காலத்தை மறந்து நாம் பயணிக்க வேண்டும்.

அதற்கமைய உண்மையை பேசி, ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனவே, இதனை செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம். நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எந்நாளும் கடனாளிகளாக விளங்க முடியாது.

வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும். வடக்கை சீர்க்குலைக்க முடியாது. அதற்கு நல்லணிக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவும் ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சமின்றி பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்வோம்.

வடக்கை அபிவிருத்தி செய்யும் சவாலுடன், தெற்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவது போன்று வடக்கையும் அபிவிருத்தி செய்வோம். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதன்மூலம், எதிர்வரும் ஒரு தசாப்த காலத்திற்குள் இலங்கையை பாரிய அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment