கனடா செய்திகள் புதிய செய்திகள்

திடீரென பற்றிய தீ… கனேடிய கிராமம் ஒன்றில் இரவில் தீ விபத்துஏராளமான கால்நடைகள் தீயில் கருகி பலி

கனேடிய கிராமம் ஒன்றில் இரவில் பற்றிய தீயில் ஏராளம் கால்நடைகள் கருகி பலியான சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் Ottawa பகுதியில் அமைந்துள்ள Manotick என்னும் கிராமத்தில் ஒரு மாட்டுக் கொட்டகையில் திடீரென தீப்பற்றியுள்ளது.

அந்த கொட்டகைக்கு அருகிலேயே உணவு தானியங்கள் சேமித்துவைக்கும் களஞ்சியங்களும் அமைந்துள்ளன. தகவல் அறிந்து அங்கு விரைந்த Ottawa தீயணைப்புப் படையினர், அந்த தீ மேலும் அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பரவுவதற்குமுன் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர்கள், இரவு 9 மணியளவில் தீ இன்னமும் பயங்கரமாக எரிந்துகொண்டிருப்பதாகவும், இரவு முழுவதும் போராடவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக 9.30 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தீ எப்படி பற்றியது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தீயில் மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், 80க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்துள்ளதால் சோகமான ஒரு சூழல் உருவாகியுள்ளது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment