இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் சிறந்த முதல்வர்கள் பட்டியல் முதல் இடத்தை பிடித்தார்!

இந்தியாவில் உள்ள சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதியில் இருந்து 7 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் எந்த மாநில முதல்வரின் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன் வைத்து சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி இருந்தது. அந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இதன்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து துறைகளிலும் மிக சிறப்பாக செயல்படுவதாக 79.2 சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக வாக்காளர்கள் மத்தியில் சந்திரசேகர் ராவ் முதலிடத்தை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 2-வது இடத்திலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.11 வது இடத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிடித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த முறை நடந்த கருத்து கணிப்பில் முதன்மை இடங்களில் இருந்தார். இந்த முறை அவர் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment