கிரிக்கெட் விளையாட்டு

தொடரை முழுமையாக கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்இ தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களால் டக்வெர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின், கேப் டவுனில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற குறித்த போட்டியில், ஏன் இப்படி தாடிய வேளையில் மைதானத்தின் மின்விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டியை இடைநிறுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய 5 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆபிரிக்க அணி 5 – 0 என வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்துஇ 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், பிரியமல் பெரேரா 33 ஓட்டங்களையும், இசுரு உதான 32 ஓட்டங்களையும், அஞ்சலோ பெரேரா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் கசிசோ ரபடா 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் மற்றும் அன்ரிச் நோர்ட்ச் ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

226 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 28 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மின் ஒளி விளக்குகளில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது, தென்னாபிரிக்க அணி சார்பில் ஏய்டன் மார்க்ரம் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் ரஸ்ஸி வன் டெர் டஸ்ஸன் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க மற்றும்
திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து, குறித்த கோளாறை சீர்செய்ய முடியாத நிலையில் போட்டி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்போது, டக்வெர்த் – லூயிஸ் முறைக்கு அமைய, தென்னாபிரிக்க அணி 95 ஓட்டங்களை பெற வேண்டியிருந்தது. தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக, தென்னாபிரிக்க அணியின் ஏய்டன் மார்க்ரம் தெரிவானதோடு, தொடரின் சிறப்பாட்டக்காரராக குயின்டன் டி கொக் தெரிவானார்.

அல்லாவின் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

இலங்கை 225/10 (49.3)
குசல் மெண்டிஸ் 56 (84)
பிரியமல் பெரேரா 33 (57)
இசுரு உதான 32 (29)
அஞ்சலோ பெரேரா 31 (37)

கசிசோ ரபடா 3/50
இம்ரான் தாஹிர் 2/33
அன்ரிச் நோர்ட்ச் 2/35

தென்னாபிரிக்கா 135/2 (28.0 வுயசபநவ 95 (D/L)
ஏய்டன் மார்க்ரம் 67ழூ (75)
ரஸ்ஸி வன் டெர் டஸ்ஸன் 28ழூ (37)

லசித் மாலிங்க 1/22 (6.0)
திசர பெரேரா 1/20 (5.0)

ஆட்ட நாயகன்: ஏய்டன் மார்க்ரம்
தொடர் நாயகன்: குயின்டன் டி கொக்

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும்...
Thamil Paarvai

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment