இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது : மக்களவையில் பிரதமர் பேச்சு

டெல்லி: நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது தலைமையிலான அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது என மக்களவையின் கடைசி அலுவல் நாளில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நடப்பு மக்களவையின் கடைசி அலுவல் நாளான இன்று பேசிய பிரதமர், அடுத்த முறை இங்கு மீண்டும் வருவேனா மாட்டேனா என்பது தெரியாது. அது மக்கள் மற்றும் கடவுளின் கையில் உள்ளது என்றார். நாடாளுமன்றத்தின் அமைப்பு மற்றும் செயல்முறைகள் குறித்து எதுவுமே தெரியாமல் ஒரு புதுமுகமாக தான் இங்கு கடந்த 2014-ல் காலடி எடுத்து வைத்ததாக கூறினார். டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய பிரதமர், தமது தலைமையிலான அரசு மதிப்பிற்குரிய அரசு என பெயர் வாங்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேக் இன் இந்தியா திட்டம் பலனளித்து வருகிறது. மேலும் வங்கதேசம் – இந்தியா இடையிலான நிலப்பிரச்சனையை தீர்த்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் இடர்பாடுகளில் சிக்கிய அண்டை நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளோம்.

ஐ.நா அவையில் இந்தியாவின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் யோகாவை இந்த அரசு பிரபலப்படுத்தியுள்ளது என்றார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவாகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 5 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தான் அதிக அளவு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்றார்.     பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறையில் அமைச்சர்களாக பெண்கள் இருந்தது பெருமைக்குரிய விஷயம் என்றார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment