Featured இந்தியா உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் – இந்தியில் டுவிட் செய்த பிரான்ஸ் அதிபர்.

இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் மரணங்கள் நடந்து வருகின்றன. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

 இந்நிலையில், நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் இந்தியில் டுவிட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில் (இந்தியில்) கூறியதாவது:

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படாதவர்கள் யாருமில்லை. இந்தியா ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து செல்கிறது என்பதை நாங்கள் அறிவோம். பிரான்ஸ் மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் மற்றும் 8 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பும். ஒவ்வொரு ஜெனரேட்டரும் சுற்றுப்புறக் காற்றிலிருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு மருத்துவமனையை 10 ஆண்டுகள் தன்னிறைவு அடையச் செய்யலாம். 

பிரான்சும், இந்தியாவும் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். எங்கள் அமைச்சகங்களும், துறைகளும் கடுமையாக உழைத்து வருகின்றன. பிரெஞ்சு நிறுவனங்கள் ஒன்றிணைகின்றன. நம் நாடுகளுக்கிடையிலான நட்பின் பின்னணியில் இந்த நம்பிக்கை உள்ளது. ஒற்றுமை என்பது நம் தேசத்தின் இதயத்தில் உள்ளது. இது நம் நாடுகளுக்கு இடையிலான நட்பின் மையத்தில் உள்ளது. நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment