இந்திய சினிமா சினிமா செய்திகள்

நேர நெருக்கடி: நயன்தாராவுக்கு தொடரும் வாய்ப்புகள்…..

நயன்தாரா, இந்தாண்டில் பத்துப் படங்களுக்கும் மேல் நடித்தால், அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. காரணம், அவருக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட படங்களோடு, இன்னொரு படமும் சேர்ந்திருக்கிறது. இதையடுத்து, படு உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. அர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘ஐரா’ திரைப்படம், வரும் மார்ச் 28ல் வெளியாக உள்ளது.

அதைத் தொடர்ந்து ‘கொலையுதிர் காலம்’, ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’, அட்லி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் படம் என படங்கள் வரிசையாக உள்ளன. தமிழ், மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களில் இருந்தும் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்திலும் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து, கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது வேல்மதி இயக்கத்தில் புதிய படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். வேல்மதி இதற்கு முன் ஸ்ரியா ரெட்டியை கதாநாயகியாகக் கொண்டு ‘அண்டாவ காணோம்’ படத்தை இயக்கியுள்ளார். தற்போது நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ள படத்தை கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரிடம் மேனேஜராக பணியாற்றிய குமார் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இத்தனைப் படங்களிலும் எப்படி நடிப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார் நயன்தாரா. இருந்தபோதும், வரும் வாய்ப்புகளை தட்டிவிடமும் பெரிதாக யோசிக்கிறார்.

Recent posts

‘போராட்டம்’ விமர்சனம் (2026)

‘போராட்டம்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: ராஜ் சிவராஜ்நடிகர்கள்: றீகன் (பாஸ்கரன் றீகன்), நிவேதிகா ராசையாஇசை: பூவன் மதீசன்ஒளிப்பதிவு: ஏ.கே. கமல்வெளியீடு: அக்டோபர் 2, 2026 சுருக்கம்...
Thamil Paarvai

‘சிக்மா’ விமர்சனம் (2026)

‘சிக்மா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2/5 இயக்குநர்: ஜேசன் சஞ்சய்நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம்நீளம்: 145 நிமிடங்கள் சுருக்கம் தமிழ்நாடு முதலமைச்சரும்...
Thamil Paarvai

‘பத்தா’ விமர்சனம் (2026)

‘பத்தா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: பாலாஜி தரணீதரன்நடிகர்கள்: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிருத்விராஜ், சஹஸ்ரா ஸ்ரீநீளம்: 145 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர் 1, 2026...
Thamil Paarvai

‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)

‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ராம்நடிகர்கள்: நிவின் பாலி, சூரி, அஞ்சலிஇசை: யுவன் சங்கர் ராஜாவெளியீடு: அக்டோபர் 1, 2026 சுருக்கம்...
Thamil Paarvai

‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)

‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ஆர். கார்த்திகேயன்நடிகர்கள்: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ், ரேவதிநீளம்: 157 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர்...
Thamil Paarvai

ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: கேவாடியாவில் வரலாற்று விழா – முழு விவரம் இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், 72-வது...
Thamil Paarvai

‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
Thamil Paarvai

‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
Thamil Paarvai

நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
Thamil Paarvai

Leave a Comment