ஏனையவை விளையாட்டு

மகளிர் ஒற்றையரில் பினாகா சாம்பியன்…. இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் பைனல் பெடரரை வீழ்த்தினார் டொமினிக் தீம்

இண்டியன்வெல்ஸில் நடந்த பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பைனலில் ரோஜர் பெடரரை வீழ்த்தி, டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பட்டத்தை கனடாவை சேர்ந்த பினாகா ஆண்ட்ரீஸ்க் தட்டிச் சென்றுள்ளார்.

இண்டியன்வெல்ஸில நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பைனலில் தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 8ம் இடத்தில் உள்ள ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் மோதினர். ஆட்டம் துவங்கிய 36 நிமிடங்களில்இ 6-3 என்ற கணக்கில் பெடரர் முதலாவது செட்டை கைப்பற்றினார்.

2ம் செட்டில் டொமினிக் தீம் எழுச்சியுடன் ஆடினார். அந்த செட் 6-3 என்ற கணக்கில் டொமினிக் வசமானது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 3ம் செட்டில், இருவரும் சளைக்காமல் போராடினர். அவரவர் கேம்களை அவரவர் தக்க வைத்துக் கொண்டனர்.

இதனால் 5-5 என்ற சமநிலை வரை அந்த செட் நீடித்தது.

பின்னர் பெடரரின் சர்வீசை அடுத்தடுத்து பிரேக் செய்த டொமினிக், 6-5 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து தனது கேமை எளிதாக தக்க வைத்துக் கொண்ட அவர் 7-5 என 3வது செட்டில் வெற்றி பெற்றார். இதையடுத்து 3-6, 6-3, 7-5 என 3 செட்களில் பெடரரை வீழ்த்தி, இண்டியன் வெல்ஸ் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை டொமினிக் தீம் கைப்பற்றினார்.

இது இருவருக்கும் இடையேயான 5வது மோதல் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 4 போட்டிகளில் இருவரும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தனர்.

ரோஜர் பெடரர் இதுவரை 5 முறை இண்டியன்வெல்சில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் டொமினிக் தீம் ஆடவர் தரவரிசையில் 8ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பினாகா வெற்றி: மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கனடாவை சேர்ந்த பினாகா ஆண்ட்ரீஸ்க்கும்இ ஜெர்மனிய வீராங்கனை ஆஞ்சலிக் கெர்பரும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 6-4, 3-6, 6-4 என 3 செட்களில் கெர்பரை வீழ்த்தி, பினாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

Leave a Comment