ஜப்பானில் 250 கிராம் எடையில் பிறந்த சிசு ஒன்று உலகிலே மிக சிறிய சிசு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர்கள் குறித்த சிசு தொடர்பில் பரிசோதனை செய்தபோது, தாயின் வயிற்றில் உள்ள சிசு போதிய வளர்ச்சியடையாமல் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், அந்த தாயார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் குறைப்பிரசவமாக வயிற்றிலிருந்த சிசுவை 6 மாதத்தில் பிரசவித்தார்.
குறித்த ஆண் குழந்தையின் எடை 268 கிராம் மட்டுமே இருந்தது. அதாவது இரு உள்ளங்கைகளுக்குள் அடங்கும் வகையில் பெரிய வெங்காயத்தின் அளவில் குறித்த குழந்தை இருந்தது. இதன் மூலம் அந்தக் குழந்தை உலகிலேயே மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என பெயர் பெற்றது.
இதையடுத்து, வைத்தியர்கள் குறித்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதன் பயனாக 5 மாதங்களில் அந்த குழந்தையின் எடை 3 கிலோ 200 கிராமாக உயர்ந்தது. தற்போது பிற குழந்தைகளை போல நலமாக இருக்கும் குறித்த குழந்தை வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.