இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மிஷன் சக்தி திட்ட ரகசியத்தை பா.ஜ.க. அரசு வெளியிட்டது துரோகம் : ப.சிதம்பரத்திற்கு டிஆர்டிஓ தலைவர் பதில்

அனைத்து விதமான அனுமதி பெற்ற பின்னரே மிஷன் சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டது என டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். விண்வெளியில் 300 கிமீ உயரத்தில் சுற்றி வந்த செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும், ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா சமீபத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்த சாதனையின் மூலம், இந்த திறனை பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த வரலாற்று சாதனையை கடந்த 27-ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். தொடர்ந்து, விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஷ’மிஷன் சக்திஷ’ எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது. செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் கூறியிருந்தார். இதுபற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். ஆனால் பா.ஜ.க. அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில், டெல்லியில் நடந்த மிஷன் சக்தி பற்றிய ஊடக சந்திப்பில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி பேசினார். அப்போது இராணுவ பிரிவில் விண்வெளி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாடு இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு, இலக்கை தாக்கி அளிப்பதில் திறமையினை வெளிப்படுத்தி உள்ளது. பாதுகாப்பதில் சிறந்த வழி என்பது தாக்குதலுக்கு முன்பே தடுப்பது என்பதே ஆகும். மேலும், ப. சிதம்பரத்தின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், செயற்கைக்கோளை வானில் அழித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை நடத்தியபின் அதனை ரகசியமுடன் வைத்திருக்க முடியாது. உலகம் முழுவதும் பல நிலையங்களில் செயற்கைக்கோளானது கண்காணிக்கப்பட்டு வந்தது. தேவையான அனைத்து அனுமதிகளும் வாங்கப்பட்டன என்றும் மிஷன் சக்தியின் செயற்கைக்கோள் கழிவுகள் அனைத்தும் இன்னும் 45 நாட்களில் மக்க செய்யப்படும் என டி.ஆர்.டி.ஓ. தலைவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, இந்தியா நடத்திய சோதனையால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 44 சதவீதம் ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிருப்தி தெரிவித்தது. இதுவரை 10 செமீ மற்றும் அதற்கு அதிகமான அளவுள்ள 60 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய சுற்றுப்பாதையில் ஆபத்தான வகையில் மிதந்து வருகின்றது என தெரிவித்தது. நாசாவின் விமர்சனத்திற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment