தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங், தற்போது என்ஜிகே மற்றும் சிவகார்த்திகேயனின் 14வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே யாரின் என்ற ஹிந்தி படத்தில் நடித்த அவர், தற்போது அஜய் தேவ்கன் நடிக்கும் டி டி பியார் டி என்ற படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்கிறார்.
இப்படம் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது : டி டி பியார்டி படத்தில் 50 வயதான அஜய் தேவ்கனைவ வேடத்தில் நான் நடிக்கிறேன். 24 வயதான நான் அவரை காதலிப்பது சுவராஸ்யமாக கதை பண்ணப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் காமெடியும் கலந்திருக்கிறது. அதனால் மிகவும் மகிழ்ச்சி உடன் நடித்து வருகிறேன். இப்படம் ஹிந்தி சினிமாவில் எனக்கு ஒரு இடத்தை பிடித்துக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.