சினிமா செய்திகள் திரைவிமர்சனம்

ஹாரிஷ் கல்யாண் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைவிமர்சனம்

பியார் பிரேமா காதலை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் ஹாரிஷ் கல்யாண் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித் ஜெயக்கொடி அந்த படத்தை தொடர்ந்து தற்போது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.
இயக்குனர்:- ரஞ்சித் ஜெயக்கொடி
நடிகர்கள் : – ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சிநாத் மா.க. பா ஆனந்த் , மஞ்சிநாத் பன்னீர் புஷ்பங்கள், லிஸ்லீ ஆண்டனி, திவ்யா பால சரவணன் மற்றும் பலர்.
தயாரிப்பு : – மாதவ் மீடியா
இசையமைப்பளார் :-சாம் சி எஸ்

கதைக்கரு:-

அம்மாவை இழந்த கதாநாயகன் ஹாரிஸ் கல்யாண் விரக்தியில் கோபக்காரனாக சுற்றிவர, அமைதியான மாடர்ன் பெண்ணிடம் காதலில் விழுகிறார். பிறகு தன் கோபத்தை கட்டுப்டுத்தினாரா ? இல்லை கோபத்தால் காதலியையே இழந்தாரா என்பது தான் இப்படத்தின் மையக்கரு.

கதைக்களம்:-

இப்படத்தின் தலைப்பில் இருந்தே இந்த படத்தின் கதை களத்தை நீங்கள் யூகித்திருக்கலாம். ஆம், இது ஒரு வழக்கமான காதல் கதை தான். என்னமோ தெரியவில்லை ஹாரிஸ் கல்யாணுக்கு தொடர்ச்சியாக காதல் படங்களாகவே வந்து அமைகிறது. நிஜத்தில் காதலிக்கிறாரோ இல்லையோ படத்தில் கொடுக்குற கேப்புல நல்லா வாழ்ந்துடுறார்.

கௌதம் ( ஹாரிஸ் ) அடிதடி சண்டை என்று முரட்டுத்தனமாக இருந்து வருகிறார். சிறு வயதில் கௌதமின் அம்மா வேறு ஒரு ஆணுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார் அதனை எண்ணி கௌதம் மனதளவில் பாதிப்படைகிறார்.

இப்படியே அடிதடி சண்டை என்று போய்கொண்டிருக்கும் கௌதம் வாழ்க்கையில் தாரா (ஷில்பா மஞ்சுநாத்) வருகிறார். ஆனால், இவரோ கௌதமிற்கு நேர் எதிராக மிகவும் மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார். அம்மா பாசம் என்றால் என்னவென்று தெரியாமல் தந்தையுடன் வாழ்ந்து வரும் கௌதமின் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்க அதனை பூர்த்தி செய்கிறார் தாரா.

இரண்டு வெவ்வேறு குணங்களைக் கொண்ட இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துவிடுகிறது. ஆனால், காதலித்து பின்னரும் தனது காதலியிடம் அடிக்கடி கோபப்பட்டுக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார் கௌதம். இப்படியே போய்க் கொண்டிருக்க தங்களது காதலுக்காக வீட்டில் சம்மதம் வாங்க படாதபாடு படுகிறார் தாரா. ஆனால் தனது கோபத்தால் தாராவின் பெற்றோர்களிடமே கெட்ட பேரும் எடுத்துவிடுகிறார் கௌதம். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் பயங்கர சண்டை ஏற்படுகிறது இருப்பினும் ஒருவரையொருவர் அனுசரித்துக்கொண்டு தங்கள் காதலை தொடர்கிறார்களா? இறுதியில் கௌதம், தனது கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ் :

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பாவின் நடிப்பு அற்புதம். கதாநாயகனை மட்டும் பொருட்படுத்தி காட்டாமல் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்தது பாராட்டக்கூடியது. சாம் சி எஸ் இசை படத்திற்கு மேலும் காதலை ஊட்டுகிறது. காமெடிய என சொல்லிக்கொண்டு மாகாபா ஆனந்த் , பாலா சரவணன் அடிக்கும் அலப்பறைகள் எரிச்சலூட்டாமல் இருக்கிறது.

படத்தின் மைனஸ் :

படத்தின் கதைக்கு தேவைப்படாத சில கட்சிகளால் இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் இழுவை சந்திக்கிறது.

இறுதி அலசல் :

தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதையை போன்றே சிறப்பான திரைக்கதை மூலமும் வலுவான கிளைமாக்ஸ் அமைத்து சமூக அக்கறையுள்ள அட்வைஸ் மூலம் படத்தை கொடுத்துள்ளார் படத்தின் இயக்குனர். வித்தியாசமான காதல் கதை என்பதால் இப்படம் நிச்சயம் இளைஞர்களை கவரும்.

Recent posts

‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
Thamil Paarvai

‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
Thamil Paarvai

அந்தோணி: திரைப் பார்வை “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு”

போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும்...
Thamil Paarvai

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம்...
Thamil Paarvai

தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும்...
Thamil Paarvai

நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
Thamil Paarvai

இரண்டாவது சுதந்திரப் போரை’ எப்படி நடத்துகிறார் என்பதைப் பேசுகிறது `இந்தியன் பாகம் 2′.

நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக...
Thamil Paarvai

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Leave a Comment