இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

300 கார்கள் எரிந்து நாசம் : பெங்க@ரில் விமான கண்காட்சி பார்க்கிங் பகுதியில் பயங்கர தீ!

தீ விபத்து குறித்து உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிகரெட்டை அணைக்காமல் வீசியதால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் சதி வேலையா என்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பெங்களூரு எலகங்காவில் நடந்துவரும் விமான கண்காட்சியின் போது வாகனம் நிறுத்துமிடத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட கார்கள் கருகி நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சதி வேலையா என்று விசாரணை நடந்து வருகிறது.பெங்களூரு எலகங்காவில் இரண்டாண்டுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி சாகச நிகழ்ச்சிகள் நடக்கும்.

அதன்படி இவ்வாண்டு பிப்ரவரி 20ம் தேதி கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது. இக்கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய், சாரங், யகோட் லான்ஸ், லகுரக ஹெலிகாப்டர், தேஜஸ், நேஷனல் ஏரோனாடிக்கல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள சாரஸ் பிடி1, ஹாக் ஐ, உள்பட 59 விமானங்கள் சாகசம் நிகழ்த்தி வருகின்றன. இந்நிலையில்இ நேற்று பிற்பகல் 12.20 மணிக்கு விமான கண்காட்சி நடந்துவரும் மைதானத்தின் 5வது நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதியில் திடீரென புகை வெளியேறியது. அதை கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் உடனடியாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தார்.

5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால்இ தீ மளமளவென பிடித்துக் கொண்டதால் ஒன்றன் பின் ஒன்றாக கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் கண்காட்சி மைதானம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இப்புகையால் 10 கி.மீட்டர் தூரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது.சம்பவம் நடந்த 15 நிமிடம் கழித்து 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின. கார்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் உயரமாக கோரபுல் வளர்ந்துள்ளது. தீ பிடித்ததும் புல் எரிந்தது. காரின் டீசல் டேங்க் மற்றும் டயர்கள் வெடித்து சிதறின. குண்டு வெடிப்பது போல் சத்தம் கேட்டது. பிஎம்டப்ளிலிவ், பார்ச்சூனர், ஜாக்கூவர், இனோவா உள்பட பல விலை உயர்த்த கார்கள் தீயில் கருகியதின் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்வதற்காக பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.சி.சிந்து வந்தார். அப்போதுதான் தீ விபத்து ஏற்பட்டது.

உடனேஇ கண்காட்சி நிறுத்தப்பட்டது. 3 மணி நேரம் கழித்து தீ முழுமையாக அணைக்கப்பட்டு புகை நின்றதை தொடர்ந்து மீண்டும் பகல் 3.15 மணிக்கு விமான கண்காட்சி தொடங்கியது. எல்சிஏ விமானத்தை பி.சி.சிந்து இயக்கினார். அடுத்தடுத்து அசம்பாவிதம்: கடந்த 1ம் தேதி எச்ஏஎல் விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி, 2பைலட்டுகள் உடல் கருகி உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, விமான கண்காட்சியின்போது சாகசம் செய்வதற்காக கடந்த 19ம் தேதி சூரியகிரண் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டபோது இரு விமானங்கள் மோதிக்கொண்டதில் ஒரு விமானி உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் மக்கள் மனதில் இருந்து இன்னும் மறையாத நிலையில், நேற்று நடந்த தீ விபத்து மூன்றாவது சம்பவமாகியுள்ளது. இதற்கிடையே, விபத்து காரணமாக கண்காட்சியில் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்ட சூரியகிரண் விமானங்கள் நேற்று முதல் கண்காட்சியில் பங்கேற்றன.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment