இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய பொய் என்பது நிரூபணம்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி : ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கடிதங்களை ராகுல்காந்தி வெளியிட்டார். ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய பொய் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அனில் அம்பானிக்காக மட்டுமே ரஃபேல் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அரசு உத்தரவாதம், வங்கி உத்தரவாதம் மற்றும் செயல்பாடு உத்தரவாதம் பெறப்படவில்லை. 2007-ல் டசால்ட் நிறுவனம் செயல்பாட்டு உத்தரவாதத்தை அளித்திருந்தது.ரஃபேல் ஊழல்பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த காங்கிரஸ் ஆட்சியில்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 126 விமானங்களை வாங்க பேரம் பேசப்பட்டு வந்த நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜ தலைமையிலான  தேசிய ஜனநாயக  கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியது. பிரதமர் மோடி கடந்த 2016, செப்டம்பரில்  தனது பிரான்ஸ் பயணத்தின் போது, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பறக்கும் நிலையில் 36 விமானங்களை வாங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து  கொண்டன.

இதில், இந்தியாவின் பங்கு நிறுவனமாக அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல், உள்நோக்கத்துடன் புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும்  காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு விலை பேசப்பட்ட நிலையில், பாஜ ஆட்சியில் ஒரு விமானம் ரூ.1,640  கோடிக்கு விலை பேசப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில்  விதிமுறைமீறல் எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை நேரடியாக  குற்றம்சாட்டி வருகிறார். அதே நேரத்தில் விமானத்தின் விலையை அரசு ரகசியமாக வைத்திருப்பது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது. அரசியல்  களத்தில், பாஜ அரசு மீது சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக இது அமைந்துள்ளது.அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

இந்தியா கேட்ட சிறப்பு வசதிகளுக்கான கட்டண நிர்ணயத்தில் தான் ஊழலே நடந்துள்ளது; ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியா கோரிய சிறப்பு வசதிகளுக்கான கூடுதல் தொகை 126 விமானங்களுக்கு 14,000 மில்லியன் யூரோ ஆகும். என்று கூறினார்.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment