உலகம் செய்திகள்

முடிவுக்கு வந்தது ரோவர் சகாப்தம் 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்தது

விண்வெளியில் சகாப்தம் கண்டுள்ள ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக  செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம்செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் 3 வாரம் கழித்து தனது பணிகளை தொடங்கியது.

இதன் ஆயுட் காலம் 90 நாட்கள் என கணிக்கப்பட்ட நிலையில், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி 45கிமீ தொலைவிற்கு ஆய்வு செய்து பல அரியவகை புகைப்படங்களை அனுப்பி விஞ்ஞானிகளை ஆராய்ச்சிகளுக்கு உதவியது. இந்த ரோவர், லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து வந்தது. அத்துடன் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆபர்ச்சுனிட்டி ரோவர் சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகம் சார்ந்த பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வந்தது.புயலில் சிக்கிய விண்கலம் செயலிழந்து விட்டதுஇந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மிகவும் மோசமான புயல் செவ்வாய் கிரகத்தில் வீசியதால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் சற்று செயல் இழந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 15ம் தேதி இரவு செவ்வாய் கிரகத்தில் வீசிய பெரிய புயல் மொத்தமாக ஆக்கிரமித்தது. இதனால் காணாமல் போன ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் சூரிய ஒளி கிடைக்காததால் சார்ஜ் இல்லாமல் ரோவரின் 6 சக்கரங்களும் செயல் இழந்து வந்தன. அதன் பிறகு நாசா ஒருமுறைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.15 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது இந்நிலையில் ரோவரின் ஒரே ஒரு பாகம் மட்டும் இடையில் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனுடன் கடந்த 7 மாதங்களாக தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர். ஆனால் அந்த ரோவரில் படிந்த தூசு காரணமாக அது தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. இறுதியாக நேற்று தொடர்பு கொள்ள முயன்றும் பயனளிக்காததால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆபர்ச்சுனிட்டி ரோவர்  பல சாதனைகள் படைத்தது இருப்பதால் இந்நேரத்தை கொண்டாட்டமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகளாக கோலோச்சி நின்ற ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலத்தின்  சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

Recent posts

உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது

பில் C-39: வேலைநிறுத்த உரிமையை முடக்கும் புதிய சட்டம் – தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு கனடாவின் லிபரல் அரசு செப்டம்பர் 21, 2026 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல்...
Thamil Paarvai

அதிகாரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டது

டிரம்பின் ஊடகத் தடை: வெள்ளை மாளிகையில் இருந்து நிருபர்களை வெளியேற்றியது எப்படி அவருக்கே எதிரான பேரழிவாக மாறியது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து...
Thamil Paarvai

வானம் ஏன் திடீென மௌனமானது?

வான்வெளியை முடக்கும் மர்ம சக்தி? அமெரிக்கா முதல் லண்டன் வரை அதிர்ச்சி! 2026 ஆம் ஆண்டு, உலக வான்வெளியில் ஒரு தொடர் மர்ம நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. லண்டனில்...
Thamil Paarvai

கனடா விதிகள் கடுமையாக்கம்

கனடா PR விதிகள் கடுமையாக்கம்: AIP விண்ணப்பதாரர்களுக்கு 90 நாள் கெடு – முழு விவரம் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC), அட்லாண்டிக்...
Thamil Paarvai

ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கம்

நாடுகள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை’: டிரம்பிற்கு கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா அமெரிக்க மண்ணிலிருந்து அனுப்பிய வலுவான செய்தி 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 21...
Thamil Paarvai

நீதிக்கான நீண்ட பயணம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: 15 பேர் குற்றவாளிகள், 9 பேர் விடுதலை – முழு விவரம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையை உலுக்கிய...
Thamil Paarvai

பாதுகாப்பான சாலைகளை நோக்கி

ஒன்டாரியோவில் வணிக டிரக் ஓட்டுநர் பயிற்சியில் புதிய மாற்றங்கள்: 103 மணிநேர கட்டாயப் பாடத்திட்டம் அறிமுகம். கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசு, வணிக டிரக் ஓட்டுநர்களுக்கான பயிற்சி...
Thamil Paarvai

அடையாளத்தின் புதிய வரையறை

மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan) என்பவர் கனடாவைச் சேர்ந்த தமிழ்-கனடிய நடிகை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) என்ற...
Thamil Paarvai

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

Leave a Comment