இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

முதல்வர் ஆர்னல்ட் பங்கேற்றார்…. யாழ்ப்பாணப் பொது நூலகம் அன்றும் – இன்றும் நூல் வெளியீட்டில்

யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் முன்னாள் பிரதம நூலகர் திருமதி ரூபாவதி நடராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணம் பொது நூலகம் அன்றும் – இன்றும்’ எனும் நூல் கடந்த(23) சனிக்கிழமை பொது நூலக மண்டபத்தில் வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி பொ. பாலசுந்தரம் பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சிறப்பு உரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார்.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்குமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் முதற்பிரதியை முன்னாள் வடகிழக்கு கல்வி பண்பாட்டலுவல்கள், மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்கள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நூலாசிரியர் திருமதி ரூபாவதி நடராஜா அவர்களுக்கான கௌரவிப்பு ஒன்றினை யாழ் மாநகரசபை சார்பில் முதல்வர் மற்றும் ஆணையாளர் இணைந்து வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்

மேலும் இந் நிகழ்வில் மாநகரசபையின் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆணையாளர்கள், முன்னாள் பிரதம நூலகர்கள், மாநகரசபையின் ஆணையாளர் திரு. த. ஜெயசீலன், மாநகரசபை உத்தியோகத்தர்கள், பொதுநூலகத்தின் பிரதம நூலகர் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recent posts

உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது

பில் C-39: வேலைநிறுத்த உரிமையை முடக்கும் புதிய சட்டம் – தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு கனடாவின் லிபரல் அரசு செப்டம்பர் 21, 2026 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல்...
Thamil Paarvai

அதிகாரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டது

டிரம்பின் ஊடகத் தடை: வெள்ளை மாளிகையில் இருந்து நிருபர்களை வெளியேற்றியது எப்படி அவருக்கே எதிரான பேரழிவாக மாறியது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து...
Thamil Paarvai

வானம் ஏன் திடீென மௌனமானது?

வான்வெளியை முடக்கும் மர்ம சக்தி? அமெரிக்கா முதல் லண்டன் வரை அதிர்ச்சி! 2026 ஆம் ஆண்டு, உலக வான்வெளியில் ஒரு தொடர் மர்ம நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. லண்டனில்...
Thamil Paarvai

கனடா விதிகள் கடுமையாக்கம்

கனடா PR விதிகள் கடுமையாக்கம்: AIP விண்ணப்பதாரர்களுக்கு 90 நாள் கெடு – முழு விவரம் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC), அட்லாண்டிக்...
Thamil Paarvai

ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கம்

நாடுகள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை’: டிரம்பிற்கு கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா அமெரிக்க மண்ணிலிருந்து அனுப்பிய வலுவான செய்தி 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 21...
Thamil Paarvai

நீதிக்கான நீண்ட பயணம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: 15 பேர் குற்றவாளிகள், 9 பேர் விடுதலை – முழு விவரம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையை உலுக்கிய...
Thamil Paarvai

பாதுகாப்பான சாலைகளை நோக்கி

ஒன்டாரியோவில் வணிக டிரக் ஓட்டுநர் பயிற்சியில் புதிய மாற்றங்கள்: 103 மணிநேர கட்டாயப் பாடத்திட்டம் அறிமுகம். கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசு, வணிக டிரக் ஓட்டுநர்களுக்கான பயிற்சி...
Thamil Paarvai

அடையாளத்தின் புதிய வரையறை

மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan) என்பவர் கனடாவைச் சேர்ந்த தமிழ்-கனடிய நடிகை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) என்ற...
Thamil Paarvai

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

Leave a Comment