சினிமா செய்திகள் திரைவிமர்சனம்

‘தடம்’ திரைவிமர்சனம்

நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் ஒன்று நிரபராதி எந்த காரணத்தை முன்னிட்டும் தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். இந்த ஓட்டையை வைத்து ஒரு குற்றவாளி எப்படி தப்பிக்கின்றான் என்பதே இந்த படத்தின் ஒருவரி கதை
எழில் என்ற அருண்விஜய் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை நடத்தி வருகிறார். அவர் தனது வேலைஇ காதல் என சுமூகமாக அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. அதேபோல் அவருடன் இரட்டைக்குழந்தையாக பிறந்த கவின் என்ற அருண்விஜய் யோகிபாபுவுடன் சேர்ந்து கொள்ளை அடித்து வாழ்க்கையை ஜாலியாக ஓட்டி வருகிறார். இந்த நிலையில் ஆகாஷ் என்ற இளைஞன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த இளைஞனை கொலை செய்தது இரண்டு அருண்விஜய்களில் ஒருவர் என்ற ஆதாரம் போலீசுக்கு கிடைக்கின்றது. ஆனால் இரண்டு பேர்களில் யார் உண்மையான கொலையாளி என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது கவின்இ எழில் இருவரில் யார் கொலையாளி? ஏன் கொலை செய்தார்? தண்டனையில் இருந்து தப்பினாரா? சிக்கினாரா? இந்த வழக்கின் தீர்ப்பு என்ன? தீர்ப்புக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை!
என்னதான் இரட்டை குழந்தைகளாக இருந்தாலும் உருவத்தில் மட்டுமே ஒற்றுமை இருக்கும், பழக்கவழக்கங்கள், குணங்கள் வேறுபாடாக இருக்கும் என்பதை அருண்விஜய் தனது இரட்டை வேட வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டும் அருண்விஜய், ரொமான்ஸ் காட்சிகளிலும் தேறுகிறார். சுருக்கமாக சொன்னால் அருண்விஜய் இந்த படத்தின் மொத்த சுமையையும் தாங்கிப்பிடித்துள்ளார்.
இந்த படத்தின் இரண்டு நாயகிகளின் காட்சிகளும் படத்தின் மெயின் கதைக்கு அதிக சம்பந்தம் இல்லாமல் இருப்பதால் மனதை கவரவில்லை. ஆனால் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் வித்யா பிரதிபா காட்சிகள் படத்திற்கு பலம். சோனியா அகர்வால், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பு சுமார். யோகிபாபு காமெடி எடுபடவில்லை
அருண்ராஜ் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் தேறுகிறது. ஆனால் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது. சண்டைக்காட்சிகள் குறிப்பாக போலீஸ் ஸ்டேஷனில் இரு அருண்விஜய்யும் மோதும் காட்சி சூப்பர்

ஒரே உருவத்துடன் உள்ள இருவரில் ஒருவர் குற்றவாளியாக இருந்தால் என்ன தீர்ப்பு வழங்கலாம் என்பதை இதற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஆய்வு செய்து இயக்குனர் மகிழ்திருமேனி திரைக்கதை எழுதியுள்ளார். தீர்ப்பு காட்சி வரை உண்மையான கொலையாளி எந்த அருண்விஜய் என்பதை ஊகிக்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றது அவரது திரைக்கதையின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. இப்படி ஒரு வித்தியாசமான திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ் தமிழில் இதுதான் முதல்முறையாக இருக்கும். முதல் பாதியில் சில தேவையில்லாத காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்வதால் த்ரில் பட ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சரியான விருந்தாக இருக்கும்.

Recent posts

‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
Thamil Paarvai

‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
Thamil Paarvai

அந்தோணி: திரைப் பார்வை “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு”

போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும்...
Thamil Paarvai

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம்...
Thamil Paarvai

தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும்...
Thamil Paarvai

நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
Thamil Paarvai

இரண்டாவது சுதந்திரப் போரை’ எப்படி நடத்துகிறார் என்பதைப் பேசுகிறது `இந்தியன் பாகம் 2′.

நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக...
Thamil Paarvai

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Leave a Comment