இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தினான். இதில் அந்த வாகனமும், பஸ்சும் வெடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் பஸ்சில் இருந்த வீரர்கள் உடல் சிதறி பலியாகி விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 41 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உடல் சிதறி கோரமாக பலியாயினர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி,கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் எல்லை தாண்டி இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதில் முஸாஃபராபாத் பாலகோட், சாக்கோதி பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. 12 மிராஜ் ரக விமாகங்கள் 1,000 கிலோ வெடிகுண்டுகள் வீசின. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் , முகமது, லஷ்கர் , தொய்பா ஹிஸ்புல் முகாஜீதின் அமைப்புகள் அழிந்துபோனதாகத் தகவல் வெளியாகியது. மேலும்,,இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகவும், எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
previous post
Recent posts
2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19
2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்
2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்
தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்
IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை
ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...




