தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சின்னலியோன்இ தற்போது வீரமாதேவியில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் கரன்ஜித் கவுர் என்ற வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். சன்னிலியோனின் சொல்லப்படாத கதைகள் என்ற அடிப்படையில் உருவாகி வரும் இந்த வெப்சீரிஸ் ஜி5 இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பில் இருந்துபோது ஒருநாள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாராம் சன்னிலியோன். அதையடுத்து அனைவரும் பதறிக்கொண்டு அவரிடம் விசாரித்தபோது, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நான்இ ஆபாச பட நடிகையாகி அதன்பிறகு பாலிவுட்டுக்கு வந்து பிரபலமாவதற்குள் ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்தேன். அந்த கசப்பான நினைவுகள் அசைப்போடுவதால் என்னையுமறியாமல் அழுகை வந்து விட்டது. அந்த அளவுக்கு என் வாழ்க்கையின் பல பக்கங்கள் ரொம்ப மோசமானவை. அதை மறக்க நினைத்தாலும் என்னால் முடியவில்லை என்று சொன்னாராம் சன்னலியோன்.