ஆன்மீகம் இந்து சமயம் புதிய செய்திகள்

மார்கழி மாதம்… பாவை நோன்பு… வைகுண்ட ஏகாதசி… திருவெம்பாவை நோன்பு வழிபட தவறாதீர்கள்…!!

மார்கழி மாத முக்கிய விரதங்கள்..

⭐ மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழி வழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

⭐ மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந்நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பனிரெண்டு நாமங்களும், பனிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் ஸ்ரீமந்நாராயணனின் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது.

பாவை நோன்பு

⭐ மார்கழி மாதத்தில், பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். இது பாவை நோன்பு என்றும் அழைக்கப்பெறுகின்றது. பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்ந்து விரதத்தை கடைபிடிப்பார்கள்.

திருவெம்பாவை நோன்பு

⭐ திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு தொடங்கி கடைபிடிக்கப்படும் நோன்பாகும். இந்த நோன்பு பாவை நோன்பு, கார்த்யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் போற்றப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம்

⭐ மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் மகாவிஷ்ணு மகிழ்வுடன் சொர்க்கத்தில் இடம் தருவார் என்பது ஐதீகம். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும்.

⭐ ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைபிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும், மோட்ச ஏகாதசி என்றும், பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்.

திருவாதிரை நோன்பு

⭐ திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நன்னாளில் இருக்கும் ஒரு நோன்பாகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது.

⭐ மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்து திங்கள் திருவெம்பாவை நோன்பு கடைபிடிக்கப்படுகின்றது. இவ்விரதத்தை கடைபிடிப்போர் திருவாதிரை தினத்தில் உபவாசம் இருந்து மறுநாள் பாராயணம் செய்வர். இந்நாளில் பெண்கள் மாங்கல்ய பலனுக்காக நோன்பு இருப்பார்கள். திருவாதிரை நட்சத்திரம் அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வார்கள்.

Recent posts

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

விண்ணகத்தின் அப்பம், மண்ணகத்தின் இரட்சிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசத்தின் மையத்திலும், உச்சத்திலும் இருப்பது நற்கருணை (The Holy Eucharist) ஆகும். இது வெறும் அடையாளமல்ல; இது ஒரு நபர். இது வெறும் அப்பமல்ல;...
Thamil Paarvai

இறைவனின் கடிதம், மனிதனின் வரலாறு

ஒரு தந்தை தனது மகனுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் தனது அன்பை, தனது அறிவுரைகளை, தனது வாக்குறுதிகளைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தக் கடிதம் மகனுக்கு வழிகாட்டியாக,...
Thamil Paarvai

Leave a Comment