உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

800 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம் பார்க்க தவறாதீர்கள்

800 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய இரண்டு கிரகங்களான வியாழன் மற்றும் சனியை பூமியிலிருந்து பார்க்கும்போது, இந்த இரண்டு கிரகங்களும் அருகருகே வரும்போது பெரிய நட்சத்திரத்தை போல ஒளிரும். இந்த வெளிச்சமே கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே

வியாழன் மற்றும் சனி கோள்களின் சந்திப்பு ஒவ்வொரு 20 வருடத்துக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும்.

இரண்டு கோள்களும் நெருங்கி வரும் என்ற போதிலும் அவை இரண்டிற்கும் மில்லியன் மைல்கணக்கில் இடைவெளி இருக்கும். இவை இரண்டும் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை அருகில் வருகின்றது. கடைசியாக 1226ஆம் ஆண்டு இந்த அரிய நிகழ்வை பூமியில் இருந்து காண முடிந்தது. அதற்கு அடுத்த 400 வருடங்கள் கழித்து 1623ஆம் ஆண்டு நெருங்கி வந்தபோது பூமியில் இருந்து இந்த நிகழ்வை காண முடியவில்லை. இதனால் 800 ஆண்டுகள் கழித்து தற்போது இந்நிகழ்வு தெரிய இருக்கிறது.

டிசம்பர் 21ஆம் தேதி

கடைசியாக கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 1226ஆம் ஆண்டு தோன்றியது. அதன்பின் இந்த நிகழ்வு வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய நாள் இந்த வருடத்தின் நீண்ட இரவாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.

இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் 20ஆம் தேதி சூரிய மறைவுக்கு பின் தோன்றி 22ஆம் தேதி வரை தெரியும். ஆனால், 21ஆம் தேதி இரவு தான் மிக தெளிவாக, பிரகாசமாக தெரியும்.

பார்க்க தவறாதீர்கள்

இந்த நட்சத்திரத்தை உலகின் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் மற்றும் டெலெஸ்கோப் கருவியை கொண்டு பார்க்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த அரிய நிகழ்வை கண்டுகளிக்க வானியல் ஆர்வலர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment