உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறை.பெண் ஒருவர் பலியானார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் ( கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்த போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார். ஆனால் இந்த வெற்றியை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.

அதேநேரத்தில் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தனர். எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நடைபெற்றால் ஜோ பைடன் வெற்றியாளர் என தீர்மானிக்கப்படுவார்.

இதை தடுக்கும் விதமாக கேபிட்டல் கட்டடத்திற்கும் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்ததால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எம்பிக்கள், துணை அதிபர் மைக் பென்ஸ் என அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வன்முறை மேலும் அதிகரித்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலியானார். இந்த வன்முறையால், பல அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கட்டடத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டிரம்ப் கணக்கு முடக்கம் தேர்தல் மற்றும் வன்முறை தொடர்பாக ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்த பின்னர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணி நேரம் முடக்கப்பட்டது. மேலும் அவர் தனது விதிமுறைகளை மீறும் 3 டுவீட்களை நீக்காவிட்டால் நிரந்தரமாக முடக்கப்படும் என சமூக வலைதளமான டுவிட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment