Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மகன் ஆர்ச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசிய மேகன் மெர்க்கல்: அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்.

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் மகன் ஆர்ச்சியுடன் இணைந்து மேகன் மெர்க்கல் ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியிருந்த கணவர் ஹரியிடமும் மேகன் மெர்க்கல் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

இளவரசர் ஹரியை பொருத்தமட்டில், பிரித்தானியாவுக்கான பயணம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என அறிந்து கொண்ட நிலையிலேயே, மேகன் மெர்க்கல் தொடர்ந்து ஹரியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

9 நாட்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த ஹரி, நேற்று லண்டனில் இருந்து கலிபோர்னியா திரும்பியுள்ளார். இந்த 9 நாட்களில் ஒரே ஒருமுறை மட்டுமே, தந்தை சார்லசுடனும் சகோதரர் வில்லியமுடனும் தனிப்பட்டமுறையில் ஹரி பேசியுள்ளார்.

அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே அமைந்தது என்றே அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனாலையே, பேசித்தீர்க்க வேண்டியவை, துவக்க கட்டத்திலேயே நீடிப்பதாக அரண்மனை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

WINDSOR, ENGLAND – APRIL 17: Princess Anne, Princess Royal, Prince Charles, Prince of Wales, Prince Andrew, Duke of York, Prince Edward, Earl of Wessex, Prince William, Duke of Cambridge, Peter Phillips, Prince Harry, Duke of Sussex, Earl of Snowdon David Armstrong-Jones and Vice-Admiral Sir Timothy Laurence follow Prince Philip, Duke of Edinburgh’s coffin during the Ceremonial Procession during the funeral of Prince Philip, Duke of Edinburgh at Windsor Castle on April 17, 2021 in Windsor, England. Prince Philip of Greece and Denmark was born 10 June 1921, in Greece. He served in the British Royal Navy and fought in WWII. He married the then Princess Elizabeth on 20 November 1947 and was created Duke of Edinburgh, Earl of Merioneth, and Baron Greenwich by King VI. He served as Prince Consort to Queen Elizabeth II until his death on April 9 2021, months short of his 100th birthday. His funeral takes place today at Windsor Castle with only 30 guests invited due to Coronavirus pandemic restrictions. (Photo by Justin Tallis/WPA Pool/Getty Images)

இளவரசர் ஹரி பிரித்தானியாவில் தங்கியிருந்த 9 நாட்களும், நிறைமாத கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் தமது கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தமது மகன் ஆர்ச்சி மற்றும் மேகனை இந்த நிலையில் தனியாக விட்டுவர ஹரி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனாலையே, தாங்கள் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக, மேகன் தினசரி தமது கணவருக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹரி- மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியிருக்க தொடங்கிய நாள் முதலே, ராணியாரும் இளவரசர் பிலிப்பும் அடிக்கடி நேரலையில் பேசிக்கொள்வதாக இளவரசர் ஹரியே முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

அரண்மனைக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவர் தெரிவிக்கையில், கடந்த ஓராண்டு காலம் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு கடினமான ஒன்று எனவும்,

அதன் தொடர்ச்சியாக தமது 99ம் வயதில் ஏப்ரல் 9ம் திகதி இளவரசர் பிலிப் காலமானார் எனவும், இதனால் மனக்கசப்பில் இருக்கும் சொந்தங்கள் ஒன்றாக சேர வாய்ப்பு அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்கா திரும்பியுள்ள ஹரி 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளார். 

Recent posts

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

Leave a Comment