அழகு ஆரோக்கியம்

சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்க..

♦ தினமும் காலையில் வெள்ளரிக்காயை, முகத்தில் தேய்த்து வர முகத்தில் உள்ள அதிகமான எண்ணெய் பசையை நீக்கும். வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவினால், எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமம் அழகு கூடும்.

♦ தயிருடன், எலுமிச்சை சாற்றை கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் இருக்கும் அதிகமான எண்ணெய் பசையானது நீங்கும்.

♦ நன்கு கனிந்த தக்காளி பழத்தை பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். மேலும் தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

♦ கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அதிகமான எண்ணெய் பசையும் நீங்கும்.

♦ காய்ந்த அரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பொடி செய்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைத்து கழுவ வேண்டும்.

♦ அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு மட்டுமல்லாமல், முகமும் பளபளப்பாக இருக்கும்.

♦ பப்பாளி பழத்தை கூழ் செய்து, அதனுடன் முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை கலந்து நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

♦ சந்தனப் பொடியை, மூல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டரில் கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி கால் மணி நேரம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, பருக்களும் குறையும்.

♦ வாரத்திற்கு ஒரு முறை ஆவிப் பிடித்து, பின் ஒரு ஈரமான துணியைக் கொண்டு, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்தால், சருமத்துளைகள் விரிவடைந்து, எண்ணெய் பசை வெளியேறிவிடும்.

♦ முகத்தில் உள்ள எண்னெய் பசையை போக்க எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பானங்கள், காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடலாம்.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment