அதானி குழுமத்தின் நிறுவனத் தலைவர் கௌதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலை ப்ளும்பெர்க் (Bloomberg) வெளியிட்டுள்ளது.
இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை உள்ளிட்ட துறைகளில் கோலாச்சி வரும் அதானி, 66.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாங் ஷான்ஷனை (Zhong Shanshan) பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.