Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

ரொறன்ரோ நபருக்கு இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்கள் கொலை வழக்கில்கிடைக்கவிருக்கும் தண்டனை

இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்களை கொன்று உடல்களை துண்டாக சிதைத்த நபர் தொடர்பில் தண்டனை தீர்ப்பு விசாரணை இன்று துவங்க உள்ளது.

ரொறன்ரோவை சேர்ந்த 47 வயது ஆதம் ஸ்ட்ராங் என்பவர் Rori Hache மற்றும் Kandis Fitzpatrick ஆகியோர் கொலை வழக்கில் மார்ச் மாதம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

கர்ப்பிணியாக இருந்த Rori Hache தனது 18 வயதில், 2017 ஆகஸ்டு மாதம் மாயமானார். ஆனால் 2008ல் Kandis Fitzpatrick மாயமாகியிருந்தார்.

Rori Hache மாயமானதன் ஒரு மாதத்திற்கு பிறகு ஒன்றாரியோ ஏரியில் அவரது சிதைந்த உடல் மீட்கப்பட்டது. அதுவரையில் பொலிசாரின் விசாரணையில் ஆதம் ஸ்ட்ராங் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் குடியிருந்த கட்டிடத்தில் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்படவே, அதில் இருந்து மனித மாமிசம் போன்ற கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2018 வரை Kandis Fitzpatrick உடல் கண்டெடுக்கப்படவில்லை என்றாலும், ஆதம் ஸ்ட்ராங் குடியிருந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் டி.என்.ஏ மாதிரிகளும் வேட்டைக்கு பயன்படுத்தும் கத்தியும் பொலிசார் மீட்டுள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில் அந்த இரு பெண்களையும் கொன்று உடல் சிதைத்ததாக ஆதம் ஸ்ட்ராங் ஒப்புக்கொண்டாலும், பொலிசாரால் அதை உறுதிபட நிரூபிக்க முடியவில்லை. இந்த வழக்கில் மிக விரைவில் தண்டனை தீர்ப்பு வழங்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.

Recent posts

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணமான இரு முக்கிய புள்ளிகள்

தியாக தீபம் திலீபன் எனும் பெயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் அகிம்சைப் போராட்டத்தின் உச்ச அடையாளமாகப் பதிந்துள்ளது. 1987ஆம் ஆண்டு, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம்...
Thamil Paarvai

டொராண்டோ மேயர் தேர்தல் 2026: முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

டொராண்டோ நகர முதல்வர் தேர்தல் அக்டோபர் 26, 2026 அன்று நடைபெறவுள்ளது. தற்போதைய முதல்வர் ஒலிவியா சௌ, நகரசபை உறுப்பினர் பிராட் பிராட்போர்ட், முன்னாள் மத்திய அமைச்சர்...
Thamil Paarvai

Leave a Comment