Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மகாராஷ்டிரா: சரத்பவாரை சந்தித்த பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் – மீண்டும் ஆபரேசன் தாமரையா?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து பட்னாவிஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் இரு வேறு கொள்கையுடைய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எப்போதுமே சிவசேனா பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் போக்கு நிலவியது. அதில் இடையில் புகுந்த சரத்பவார் உத்தவ் தாக்கரேவை, தங்கள் பக்கம் இழுத்து அவரை முதல்வராக்க ஆதரவுக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இது கொள்கையற்ற கூட்டணியாகவே கருதப்படுகிறது. இந்த கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க ஆபரேசன் தாமரை என்ற பெயரில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு மண்ணைக் கவ்வியது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சரத்பவாரை தங்களது பக்கம் இழுத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க பா.ஜ.க இதற்கு முன்பு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. தற்போது மீண்டும் சந்தித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு பட்னாவிஸ் விளக்கம் அளித்திருக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கொடுத்துள்ள விளக்கத்தில், சரத்பவாருக்கு சமீபத்தில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதனால் அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன், என்று குறிப்பிட்டு இருவரும் சந்தித்த படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் கூறுகையில், `சரத்பவார் எப்படி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்பது குறித்து, தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்’ என்று தெரிவித்தார். மேலும்,` இந்த சந்திப்பில் எந்த வித அரசியலும் இல்லை. ஆபரேசன் தாமரையை மறந்துவிடுங்கள். அது இங்கேயோ அல்லது மேற்கு வங்கத்திலோ எடுபடாது. அப்படி இருக்கும் போது ஏன் ஒவ்வொரு சந்திப்பையும் அரசியலாக்குகிறீர்கள்’ என்றும் அவர் தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளதையும் சஞ்சய் ராவுத் சுட்டிக்காட்டினார்.

மகாராஷ்டிரா அரசு மராத்தா இன மக்களுக்கு 13 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றி இருந்தது. ஆனால் அதனை சட்டவிரோதம் என்று கூறி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது. அதனால் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

அதேசமயம் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையை மகாராஷ்டிரா அரசு சரியாக கையாளவில்லை என்று கூறி பா.ஜ.க வரும் 5-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்தும் சரத்பவாருடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment