Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கொழும்புக்குள் வந்த 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள்-மூன்று மணித்தியாலத்தில்

மூன்று மணித்தியாலத்தில் கொழும்புக்குள் 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பகுதியிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய 147 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குளியாபிட்டி பகுதியில் 100 பேரும், கண்டி பகுதியில் 85 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 21775 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் 3,969 வாகனங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் பயணித்த 4,191 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக பயணிக்க முற்பட்ட 154 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் பயணித்த 275 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்புக்கமைய நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களே அதிகளவில் வந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 16 ஆயிரத்து 571 வாகனங்கள் இவ்வாறு வருகைத்தந்துள்ளன. இதன்போது ஹைலெவல் வீதி மற்றும் கண்டி வீதி ஊடாகவே கொழும்புக்குள் பெருந்தொகையான வாகனங்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் , 8,412 வாகனங்களில் சுகாதார பிரிவினரும், 9498 வாகனங்களில் அரச உத்தியோகத்தர்களும் வருகை தந்துள்ளதுடன், 3968 வாகனங்களில் நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதற்கமைய 3 மணிநேரத்திற்குள் 62235 வாகனங்கள் கொழும்புக்குள் வருகை தந்துள்ளன.

கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்களை கணக்கீடு செய்வது மட்டுமன்றி, அந்த வாகனங்களில் வருகை தருபவர்கள் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனரா?, அவர்கள் அத்தியாவசிய சேவை பணியாளர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றிவளைப்புக்காக ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , இதன்போது பொலிஸார் எரிய பின்தொடர்ந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்போது தொழிலுக்கு செல்பவர்கள் தங்களது நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை பொலிஸாருக்கு காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment