ஆன்மீகம் இந்து சமயம்

பஞ்ச லிங்கங்களை பாதுகாக்கும் நாகங்கள்-எல்லை மீறினால் உயிருக்கு ஆபத்து?

இலங்கை, தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு ஒரு நாடாகும். நான்கு பக்கமும் நீர் சூழ, மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என சொர்க்கத்தையே கண்முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் இலங்கைத் தீவு.

நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். எப்போதும் குளுகுளுவென வானிலை இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இத்தகைய இயற்கை அழகு கொண்ட இடத்தில் இருக்கும் ஒரு மர்ம சுற்றுலா தளம் பற்றி தான் இன்று பார்க்க போகின்றோம்.

இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் டன்சினன் தூவான கங்கை நீர்வீழ்ச்சி ஓர் இயற்கையின் அதிசயம்.

இந்நீர்வீழ்ச்சி 100 மீற்றர் உயரத்தில் பூண்டுலோயிவிலிருந்து நுவரெலியா செல்லும் வீதியில் டன்சினன் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ளது.

இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்சியின் அழகை ரசித்துவிட்டு கோயில் தரிசனத்தில் ஈடுபட்டு செல்வர். இக்கோவில் மிக சக்திவாய்ந்ததொன்றாகும் .

காரணம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக இந் நீர்வீழ்ச்சியிலிருந்து ஐந்து சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து லிங்கங்களும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதோடு அந்த சிவலிங்கங்களை நாகங்கள் அடிக்கடி வந்து பாதுகாப்பதாகவும் கூறப்படுகின்றது.

கோவில் அச்சகர் இல்லாத போது அர்ச்சகர் உருவில் வேறொரு நபர் வருகை தந்து பக்தர்களுக்கு பூசைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அற்புதத்தை பலமுறை பலர் கூறியதாகவும் அங்கு உள்ள பூசகர் கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லை, பக்தி இருந்தால் மட்டும் தான் கடவுள் தரிசனத்தை காண முடியுமாம்…

எல்லை மீறி கடவுளை கொச்சை படுத்தினால் சில சமயம் உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்துமாம். இங்குவரும் சுற்றுலாப்பயணிகளின் கண்களை கவர்ந்திழுக்கும் தன்மை இந்நீந்நீர்வீழ்ச்சிக்கு உண்டு. அதனால் வருடம் முழுவதும் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக வெகுவாக காணப்படுகின்றது.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து மீண்ட பின்னர் நாமும் ஒருதடவை தூவான கங்கை எனும் டன்சினன் நீர்வீழ்சியின் அழகை ரசித்து விட்டு வருவோம்.  

Recent posts

சிலுவைகளைச் சுமக்கும்போது நீர் என்னோடு இருப்பீராக.

சிலுவைப்பாதை – 14 நிலைகள்** (Siluvaippadhai – 14 Nilaigal) அறிமுகம் சிலுவைப்பாதை என்பது இயேசு கிறிஸ்து தனது சிலுவையைச் சுமந்து, கொல்கொதா மலைக்குச் சென்ற பாதையில்...
Thamil Paarvai

ரோமன் கத்தோலிக்க பாஸ்கா திருவிழிப்பு

கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஆண்டில் மிக உயர்ந்ததும், மிக முக்கியமானதுமான கொண்டாட்டம் பாஸ்கா திருவிழிப்பு (Easter Vigil) ஆகும். இது இயேசு கிறிஸ்து சாவிலிருந்து உயிர்த்தெழுந்த நிகழ்வை மையமாகக்...
Thamil Paarvai

புதிய வழியில் அழைக்கிறார்.

தவக்காலம்: நாள் 1 (சாம்பல் புதன்) – கதை “சாம்பலும், புதிய தொடக்கமும்” பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறிய கிராமத்தில் அந்தோணி என்ற பெயரில் ஒரு...
Thamil Paarvai

🌿 ஒரு புதிய ஆன்மீக பயணத்திற்கான தொடக்கம் 🌿

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்கு தியாகம், கருணை, மன்னிப்பு, மற்றும் புதிய தொடக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. விபுதி புதன் (Ash Wednesday) என்பது அந்த ஆன்மீகப் பயணத்தின் முதல்...
Thamil Paarvai

செல்வங்கள் பெருக… 

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்ட ஒன்று பணம். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம்...
Thamil Paarvai

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?…

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது...
Thamil Paarvai

சபரிமலைஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள் .

🛕 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோவிலில் பல விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. 🕉️ முக்கிய பூஜைகள்: 🌅உஷத் கால...
Thamil Paarvai

ஐயப்பன் கோவிலில் தேங்காய் வழிபாடு எதற்காக?

🙏 ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது..! 🙏 🛕 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது,...
Thamil Paarvai

அமைச்சர் அடுத்து என்ன செய்வது? ஐயப்பன் வரலாறு

👨‍⚖️ அமைச்சர் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் அவர் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருக்கு சாதகமாக அமைந்தது. 🗣️ அதாவது மணிகண்டன் தனது...
Thamil Paarvai

Leave a Comment