Featured ஆரோக்கியம் உடற்பயிற்சி

ஆண்கள் இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாமா?

ஒரு சிலருக்கு பகல் நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்ய இயலாது. இரவில் பணி செய்து பகலில் தூங்குபவா்களுக்கும் பகல் நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாது. அந்த சூழலில் இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாமா? படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக உடற்பயிற்சிகள் செய்தால், நமது உடலில் உள்ள சக்தி அதிகாித்து, நமது தூக்கத்திற்கு இடையூறாக இருக்குமே? இவ்வாறான கேள்விகள் நமது மனதில் எழலாம். நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. நாம் இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். பொதுவாக மங்கிய மாலை வேளையில் நமது உடலானது அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. ஆகவே இருட்டிய பின்பு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்வது சிறந்த பலன்களைத் தரும்.

ஒரு அருமையான இரவு உணவை முடித்த பின்பு, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், அது நமது சக்தி அனைத்தையும் அழித்து, நமக்கு சொிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகவே ஒரு நாளில் நாம் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பின்பு உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்தாலும் அல்லது வீட்டிலேயே இருந்து உடற்பயிற்சிகளைச் செய்தாலும், உடற்பயிற்சிகளுக்கு உாிய உடைகளை அணிய வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். அதாவது உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு வசதியாக இருக்கும் உடைகளை அணிய வேண்டும். அதாவது தெருவில் நடந்து போகும் போது, சுற்றுப்புற சூழலை அறிந்து அதற்கு ஏற்றாா் போல நாம் செல்வது போல, உடற்பயிற்சிகளைச் செய்யும் போது அதற்குத் தகுந்தவாறு உடைகளை அணிவது நல்லது.

உடலில் அளவுக்கு அதிகமாக நீா் வெளியேறினால், நமது உடலில் உள்ள சக்தி குறைந்துவிடும். மேலும் தசைகளில் பிடிப்பு மற்றும் திாிபு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, அதனால் நாம் உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு தடைகளாக அமைந்துவிடும். ஆகவே தினமும் போதுமான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். அதாவது அலுவலகத்தில் இருக்கும் போதும் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், உடற்பயிற்சியின் போதும் மற்றும் உடற்பயிற்சிக்கும் பின்பும் கண்டிப்பாக தண்ணீா் அருந்த வேண்டும்.

நீண்ட காலம் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு ஒரு இடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உடற்பயிற்சிகூடத்திற்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்வது உங்களுக்கு பிடித்திருந்தால், பணம் செலுத்தி, அங்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வீட்டில் செய்ய விரும்பினால், வீட்டில் ஒரு ஒதுக்குப் புறத்தைத் தோ்ந்தெடுத்து, அதை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிக் கருவிகள் அல்லது யோகா பயிற்சிகள் செய்வதற்குப் பயன்படும் பாய் போன்ற கருவிகளை அங்கு சேகாித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பு செய்யும் முன் தயாாிப்புகள் மிகவும் முக்கியமானவை. அதாவது கை கால்களை நீட்டி மடக்கி செய்யக்கூடிய முன் தயாாிப்பு பயிற்சிகளை உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் செய்து வந்தால் அவை நமது இடுப்பு, தொடைகள் போன்றவற்றை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருக்கும்.

உங்களுடைய உறுப்புகளின் இயக்கங்களில் பிரச்சினைகள் இருந்தால், அந்த உறுப்புகளை நீட்டி மடக்கி அதன் தசைகளுக்கு தினமும் பயிற்சி கொடுங்கள். தொடா்ந்து நீண்ட நேரம் நாற்காலியில் அமா்ந்து இருப்பதால், முதுகு வலி ஏற்பட்டால், சிறிது நேரம் எழுந்து, நிமிா்ந்து நடந்து, உங்களைத் தயாா் செய்யுங்கள். முதுகு வலி காணாமல் போய்விடும்.

இரவு தூங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சிகளைச் செய்வது மிகவும் சிறந்த ஒன்றாகும். அதுப்போல் தூங்குவதற்கு முன்பாக ஒரு குவளை தண்ணீா் அருந்துங்கள். பின் உங்கள் படுக்கையில் லாவண்டா் நறுமண எண்ணெயைத் தெளியுங்கள். உங்களின் தூக்கம் இனிய கனவுகளால் அலங்காிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

Recent posts

பிரிட்டிஷ் கொலம்பியா அரசியல் நிலப்பரப்பு மாற்றம்

2026 பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத் தேர்தலில், முற்போக்குக் கன்சர்வேடிவ் கட்சி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் முதல் முறையாக பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்கியது; இது கூட்டாட்சி அளவில் ட்ரம்பின்...
Thamil Paarvai

புயல் “அர்னாப்” மற்றும் அதனுடன் தொடர்புடைய பலத்த மழையால் சிவப்பு எச்சரிக்கை

இலங்கை தற்போது புயல் “அர்னாப்” மற்றும் அதனுடன் தொடர்புடைய பலத்த மழையால் ஏற்படும் பல அபாயங்களை எதிர்கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் முக்கியமாக கடல் பகுதிகள் மற்றும் நிலச்சரிவு...
Thamil Paarvai

கல்லூரிகள் மாணவர் மீது செலுத்தும் அழுத்தங்கள்

மாணவர் வருகை சரிவு… வருமானமின்றித் தவிக்கும் கல்லூரிகள் மாணவர் மீது செலுத்தும் அழுத்தங்கள் சர்வதேச மாணவர் வருகை கடுமையாகக் குறைந்ததால், கனடா முழுவதும் உள்ள கல்லூரிகள் கடுமையான...
Thamil Paarvai

வேக வரம்பு உயர்வு.401 புதிய விதிகள்

ஹைவே 401 புதிய விதிகள்: 110 km/h வேக வரம்பு உயர்வு – ஆனால் “ஸ்டன்ட் டிரைவிங்” பொறி இன்னும் ஆபத்தானது! ஒன்டாரியோவில் ஹைவே 401 உட்பட...
Thamil Paarvai

ஏன் இது சர்ச்சையைத் தூண்டுகிறது? செம்மணி அறிக்கை

செம்மணி அறிக்கை தொடர்பான சர்ச்சையின் மையமானது, தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், புதைகுழியில் உள்ள எலும்புக்கூடுகள் “தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு”...
Thamil Paarvai

பழமைவாதிகளின் முக்கிய விமர்சனங்கள் மற்றும் கோரிக்கைகள்

கனேடிய பழமைவாதிகள் (Conservatives) தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் (TFWP) தொடர்பான தங்கள் நிலைப்பாட்டில் முழுமையாக “தவறு” என்று கூற முடியாது, ஆனால் அவர்களின் “திட்டத்தை முழுவதுமாக...
Thamil Paarvai

மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

OSAP மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன: மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் 2026 ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ மாகாண OSAP (மாகாண மாணவர் உதவித்...
Thamil Paarvai

87 இலட்சம் கனடிய டாலர் மதிப்பிலான புதிய ஆதரவுத் திட்டத்தை அறிவித்தனர்

கார்னி மற்றும் ஃபோர்டு இணைந்து 87 இலட்சம் கனடிய டாலர் மதிப்பிலான புதிய ஆதரவுத் திட்டத்தை அறிவித்தனர்: எஃகு, வாகனத் தொழில் மற்றும் தாது வளப் பகுதிகளுக்கு...
Thamil Paarvai

கனடாவின் ஒற்றுமை உறுதி

ஆல்பர்ட்டா பிரிவினை வாக்கெடுப்பு தோல்வி: கார்னிக்கு வரலாற்று வெற்றி, கனடாவின் ஒற்றுமை உறுதி ஆக்டோபர் 19, 2026 அன்று, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் நடத்திய “கனடாவிலிருந்து பிரிவதா”...
Thamil Paarvai

Leave a Comment