Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஸ்டாலின் முன்னிலையில் ரூ.28,508 கோடியில் 40 தொழில் திட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாட்டில் ரூ.28 ஆயிரத்து 508 கோடி முதலீட்டில் 49 திட்டங்கள் மூலம் 83 ஆயிரத்து 482 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சென்னை கிண்டியில் ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் தொழில் துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு என்ற மாபெரும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் பங் கேற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது சிறப்பு அம்சங்களாக ரூ.17,141 கோடி முதலீட்டில் 44,054 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.7,117 கோடி முதலீட்டில் 6,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த 49 திட்டங்களின் மூலம் ரூ.28,508 கோடி முதலீட்டில் 83,482 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகிட வழிவகை கிடைத்துள்ளது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-ஐ முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில் வணிகம் புரிதலுக்கு தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகள் இந்த இணையதளத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புதுத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த டிஜிட்டல் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக புதுத் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த மானியத்திற்காக ஏறக்குறைய 75 புதுத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அவற்றில் கோர் ஸ்டாக், அட்சுயா டெக்னாலஜிஸ், பெசிப்யர், ஸ்பெயர் பே, பிளத்தி ஆகிய 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான மானிய அனுமதி உத்தரவுகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

உயர்தர உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான எந்திர பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு திறன்மிகு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டிட்கோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முதலீடுகள், மின் ஆலைகள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவைகள், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருத்துவப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பின்வரும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment