Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பயங்கரவாதிகளின் சதி டெல்லியில் ‘டிரோன்’ தாக்குதல் நடத்த திட்டம் கண்டுபிடிப்பு

காஷ்மீர் மாநிலம் ஜம்மு விமான படைத்தளத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி 2 மர்ம டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானம்) பறந்து வந்து தாக்குதல் நடத்தின.

2 டிரோன்களிலும் சிறிய வகை ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தனர். அது கீழே விழுந்து வெடித்தது. 2 பேர் காயம் அடைந்தனர்.

ராணுவ மையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவது இதுதான் முதல் தடவை ஆகும். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த டிரோன்களை இயக்கி தாக்குதல் நடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகள் பல தடவை காஷ்மீர் பகுதிகளில் டிரோன்களை பறக்க விட்டபடி உள்ளனர். இதனால் டிரோன்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஆகஸ்டு 15-ந் தேதி டெல்லியில் மத்திய அரசு சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும். அதில் பிரதமர் மோடி கொடி ஏற்றுவார்.

சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரம் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. எனவே வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக உளவு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆகஸ்டு 15-ந்தேதிக்கு முன்னதாக எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் இப்போதே முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக டெல்லியில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆளில்லா பறக்கும் சாதனங்கள், டிரோன், ரிமோட் கன்ட்ரோல் ஏர்கிராப்ட், பாரா ஜம்பிங், ஹாட் ஏர் பலூன் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment