ஆன்மீகம் கிறிஸ்தவம்

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி வரை நடக்கும்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 4 மணிக்கு ஜெபமாலை நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பலியும், 7 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். பின்னர் கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரார்த்தனைக்கு பிறகு ஆயர் கொடியேற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு 3-ம் திருப்பலி நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு பனிமயமாதாவுக்கு பொன் மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம்ட 4-ந்தேதி இரவு பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. மறுநாள் மாலை 5 மணிக்கு பாளை மறை மாவட்ட பி‌ஷப் அந்தோணி சாமி தலைமையில் 8-ம் திருப்பலி நடக்கிறது.

கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சி நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள், பங்குதந்தை குமார் ராஜா, உதவி பங்கு தந்தை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Recent posts

பழைய ஏற்பாட்டின் அடிப்படைச் நம்பிக்கைகள்

1. மோசேயின் பிறப்பும் அழைப்பும் யோசேப்பு மரித்தபின்பு, அவருடைய சந்ததியினரான இஸ்ரவேலர் எகிப்தில் பெருகினர். புதிய பார்வோன் இஸ்ரவேலரைப் பார்த்துப் பயந்து, அவர்களை அடிமைகளாக்கி, கடின வேலைகளைச்...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

Leave a Comment