ஆன்மீகம் இந்து சமயம்

நாளை சிறப்புமிகு ஆனி உத்திரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் அற்புதமான திருமேனி நடராஜர் திருவுருவம். நடராஜ பெருமானின் திருவுருவில் பஞ்சபூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள், அனைத்து தெய்வ தத்துவங்களும் அடக்கம்.

இவரது உடல் வெம்மையானது. கழுத்தில் நீல கண்டம், கையில் அக்னிச்சுடர், உடலில் சுடுகாட்டு சாம்பல் பூசப்பட்டு உஷ்ணமான திருமேனியாக இருப்பதால், சிவபெருமானை குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அதாவது ஆடலரசரான நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படும்.

இறைவனை குளிர்விப்பதால் இயற்கையும் குளிர்கிறது என்பது ஐதீகம். இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

ஏன் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது?

வைகாசி மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் ஆனி மாதத்தில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், நடராஜ பெருமானை வெப்ப தாக்கத்திலிருந்து குளிர்விப்பதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களை கொண்டு ஆனி மாதத்தில் திருமஞ்சனம் செய்கின்றனர்.

ஆனி உத்திரம் :

உலகெங்கிலும் வாழும் பெருமக்களுக்கெல்லாம் பரம்பொருளாக இருந்து இந்த உலகையும், மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

ஆனி மாதம் என்றாலே ஆனி உத்திர விரதம் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனி உத்திரம் தரிசனத்தன்று அம்பலத்தாடும் நடராஜருக்கு அதிகாலை நேரத்தில் ஆனந்த திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் சர்வ லோக நாயகராக சித்சபைக்கு நடராஜர் ஆனந்த தாண்டவமாடியபடி தரிசனம் தரும் நாள் ஆனி உத்திரம் ஆகும்.

பலன்கள் :

🌻 ஆனி திருமஞ்சன நாளில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை பெண்கள் தரிசித்தால் சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள்.

🌻 கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

🌻 ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும்.

🌻 கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

Recent posts

பழைய ஏற்பாட்டின் அடிப்படைச் நம்பிக்கைகள்

1. மோசேயின் பிறப்பும் அழைப்பும் யோசேப்பு மரித்தபின்பு, அவருடைய சந்ததியினரான இஸ்ரவேலர் எகிப்தில் பெருகினர். புதிய பார்வோன் இஸ்ரவேலரைப் பார்த்துப் பயந்து, அவர்களை அடிமைகளாக்கி, கடின வேலைகளைச்...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

Leave a Comment