சினிமா சினிமா செய்திகள் திரைவிமர்சனம்

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

இயக்கம்: ஏ.எல். விஜய்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் சாப்டர் 1 படம் ஹாலிவுட் படங்களை நம்ம ஊர் ரசிகர்களுக்கு ஏற்ப இயக்கி வந்த ஏ.எல். விஜய் இந்த படத்திலும் பிரிசன் படங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்.

லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த இயல் இந்த படத்தில் அர்ஜுனுக்கு மகளாக நடித்துள்ளார். அவருக்கு உடம்பில் ஒரு பெரிய பாதிப்பு. அதை சரி செய்ய பணம் தேவைப்படும் நிலையில், ஹவாலா மூலம் பணத்தை அடைகிறார் அருண் விஜய். அந்த பணத்தை திருட நடக்கும் முயற்சியில் வெளிநாட்டில் போலீஸாரை அடித்து விடும் அருண் விஜய் சிறைக்கு செல்கிறார். இஸ்லாமிய தீவிரவாதியாக காட்டப்படும் உமர் பாய் சிறையில் இருக்கும் சிலரை மீட்க முயற்சிக்க அந்த பிரிசன் பிரேக்கை தடுக்க போராடும் எமி ஜாக்சனுக்கு துணையாக நிற்கிறார் கடைசியில் தீவிரவாதிகளின் சதியை முடித்தாரா? தனது மகளை காப்பாற்றினாரா என்பது தான் மீதிக்கதை.வழக்கமாகவே ஏ.எல். விஜய் படங்கள் என்றால் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காகத்தான் இருக்கும். இந்த படத்திலும் அதில் எந்தவொரு குறையும் இல்லை. மதராசப்பட்டினம் படத்தில் எமி ஜாக்சனை கோலிவுட்டில் அறிமுகப்படுத்திய ஏ.எல். விஜய் மீண்டும் அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கிறார். படம் முழுக்க அவரும் அருண் விஜய்யும் செய்யும் ஸ்டன்ட் காட்சிகள் நல்லாவே படமாக்கப்பட்டுள்ளன. நிமிஷா சஜயன் நர்ஸாக வந்து தன்னுடைய கதாபாத்திரத்தில் கலக்குகிறார்.

படத்தின் மேக்கிங், பின்னணி இசை, அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சனின் நடிப்பு என படத்திற்கு பல பிளஸ்கள் உள்ளன. ஆக்‌ஷன் விரும்பிகளை கவரும் விதமாக பல சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

படத்தின் கதை பெரிதாக எழுதப்படாதது பெரும் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமான விஷயங்களும் ரசிகர்களை தியேட்டரில் கட்டிப்போடும் விஷயங்களும் குறைவு. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் பெரும் உழைப்பை பாடல்களில் போடவில்லை என்பது தெரிகிறது. அருண் விஜய் ரசிகர்கள் மற்றும் ஆக்‌ஷன் பிரியர்களை நிச்சயம் இந்த மிஷன் சாப்டர் 1 கவரும்.

Recent posts

‘போராட்டம்’ விமர்சனம் (2026)

‘போராட்டம்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: ராஜ் சிவராஜ்நடிகர்கள்: றீகன் (பாஸ்கரன் றீகன்), நிவேதிகா ராசையாஇசை: பூவன் மதீசன்ஒளிப்பதிவு: ஏ.கே. கமல்வெளியீடு: அக்டோபர் 2, 2026 சுருக்கம்...
Thamil Paarvai

‘சிக்மா’ விமர்சனம் (2026)

‘சிக்மா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2/5 இயக்குநர்: ஜேசன் சஞ்சய்நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம்நீளம்: 145 நிமிடங்கள் சுருக்கம் தமிழ்நாடு முதலமைச்சரும்...
Thamil Paarvai

‘பத்தா’ விமர்சனம் (2026)

‘பத்தா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: பாலாஜி தரணீதரன்நடிகர்கள்: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிருத்விராஜ், சஹஸ்ரா ஸ்ரீநீளம்: 145 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர் 1, 2026...
Thamil Paarvai

‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)

‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ராம்நடிகர்கள்: நிவின் பாலி, சூரி, அஞ்சலிஇசை: யுவன் சங்கர் ராஜாவெளியீடு: அக்டோபர் 1, 2026 சுருக்கம்...
Thamil Paarvai

‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)

‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ஆர். கார்த்திகேயன்நடிகர்கள்: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ், ரேவதிநீளம்: 157 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர்...
Thamil Paarvai

ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: கேவாடியாவில் வரலாற்று விழா – முழு விவரம் இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், 72-வது...
Thamil Paarvai

‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
Thamil Paarvai

‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
Thamil Paarvai

அந்தோணி: திரைப் பார்வை “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு”

போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும்...
Thamil Paarvai

Leave a Comment