உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அருந்தாதீர்….. சூடான பானம் அருந்துவதால் புற்றுநோய் வர 90% வாய்ப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சூடாக தேநீர் அருந்துவதால் உணவுக்குழல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வெயில் காலமோ அல்லது குளிர் காலமோ பெரும்பாலானவர்கள் சூடாக தேநீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இன்னும் சிலரோ காலையில் எழுந்தவுடனே தேநீர் அருந்தினால் தான் மற்ற வேலையே செய்யும் அளவிற்கு தேநீர் மோகம் மக்களிடையே தொற்றியுள்ளது. சூடு இல்லாமல் தேநீர்இ காபி குடிப்பவர்களின் எண்ணிக்கையோ மிக குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் சூடாக தேநீர் அருந்தினால் உணவுக்குழாயை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதாவது 60 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சூடாக தேநீர் அருந்துவதால் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல நாள் ஒன்றுக்கு 700 மி.லி., தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவிகித அளவிற்கு புற்றுநோய் தாக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 1,300 பேர் புற்றுநோயால் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது. அதிகமான சூட்டுடன் டீயோ, காபியோ குடிப்பதால் உணவுக்குழாயின் சுவர் பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமடைகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க புற்றுநோய் சங்கம் கடந்த 13 ஆண்டுகளாக 40 முதல் 75 வயதுக்குட்பட்ட சுமார் 50,045 பேரிடம் நடத்திய ஆய்வில், சூடாக தேநீர் அருந்துவதால் 317 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. புகையிலையால் மட்டும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதில்லை, புத்துணர்வுக்காக அருந்தும் தேநீராலும் கூட புற்றுநோய் ஏற்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதிக சூடு இல்லாத தேநீர் அருந்தினால் இத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment