Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

அவசர நிலை பிரகடனம் கனேடிய மாகாணம் முழுமைக்கும் : காட்டுத்தீ பாதிப்பின் பிரதிபலிப்பு

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, மாகாணம் முழுமைக்கும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை வெளியேற்றப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் எப்போது வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலைமையும் உருவாகியுள்ளது.

தொடர்ந்து உள்ளூர் அலுவலர்கள் அவசர நிலை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு பெருமளவில் மக்களை விரைவாக வெளியேற்றுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், தேவையானால், அவர்களுக்கு தங்கும் இடம் முதலான ஏற்பாடுகளை அரசு செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் Mike Farnworth தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுவதும் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் பல இடங்களில் வாழும் மக்களுக்கு வெளியேற ஆயத்தமாக இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர நிலை 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும், தேவையானால் அது நீட்டிக்கப்படக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment