Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

இரா. சம்பந்தன் வயது மூப்பு காரணமான, உடல் நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியவர் இரா. சம்பந்தன். இவர் இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவராகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகவும் இருந்தார். மேலும், பல ஆண்டுகள் எம்.பி-யாகவும் இருந்த அவர், 2015 முதல் 2018ஆம் ஆண்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன் அவையில் துணிச்சலான மற்றும் இடைவிடாது குரல் கொடுத்தவர். 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, அவர் ‘ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத’ நாட்டிற்குள் தமிழர்களுக்கு சம உரிமைகளை அயராது கோரினார். வழக்கறிஞராக பயிற்சி பெற்ற அவர், இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு மற்றும் தென்னிலங்கை சிங்கள ஸ்தாபனம் கடந்த காலத்தில் வழங்கிய ஆனால் நிறைவேற்றத் தவறிய பல வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வுக்கான தனது வாதங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனின் பூதவுடல் இன்று (4) காலை மார்டின் வீதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து தந்தை செல்வா அரங்கத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இந்தநிலையில், இராஜவரோதயம் சம்பந்தனது புகழுடல் நாளை (5) காலை 6 மணியளவில் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்டு 9:30 மணிமுதல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்படும்.

இதைனையடுத்து ஞாயிற்றுகிழமை அன்னாரது இல்லத்தில் மதியம் இறுதி கிரியை இடம்பெற்று உடல் தகனம் செய்யப்படும்.

Recent posts

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணமான இரு முக்கிய புள்ளிகள்

தியாக தீபம் திலீபன் எனும் பெயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் அகிம்சைப் போராட்டத்தின் உச்ச அடையாளமாகப் பதிந்துள்ளது. 1987ஆம் ஆண்டு, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம்...
Thamil Paarvai

டொராண்டோ மேயர் தேர்தல் 2026: முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

டொராண்டோ நகர முதல்வர் தேர்தல் அக்டோபர் 26, 2026 அன்று நடைபெறவுள்ளது. தற்போதைய முதல்வர் ஒலிவியா சௌ, நகரசபை உறுப்பினர் பிராட் பிராட்போர்ட், முன்னாள் மத்திய அமைச்சர்...
Thamil Paarvai

Leave a Comment