ஆன்மீகம் கிறிஸ்தவம்

உலகின் முதல் கிறிஸ்துமஸ் குடில்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துவின் பிறப்புக்காட்சியைக் காட்டும் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது நம்மவரிடையே பாரம்பரியமாக நடக்கும் ஒரு நிகழ்வு.

வத்திக்கானில் புனித பேத்ரு பசிலிக்கா பேராலயத்துக்குமுன் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பழக்கத்தைப் புனித இரண்டாம் ஜான் பால் போப்பாண்டகை தான் கொண்டுவந்தார். அதற்குமுன்பு, கிறிஸ்துமஸ் மரம் வைப்பதுமட்டுமே வழக்கமாக இருந்தது. இவ்வாண்டு நவம்பர் மாதமே கிறிஸ்துமஸ் மரம் வடஇத்தாலியிலிருந்து வந்து சேர்ந்து விட்டது. கிறிஸ்துமஸ் குடில் இவ்வாண்டு மிக நூதனமாக மணலிலே அமைக்கப்படுகிறது. தரை, கூரை, சுவர், மிருகங்கள், வானதூதர்கள், சூசை, மரியா, குழந்தை இயேசு, இடையர்கள் என அனைத்தும் மணலிலேயே செய்யப்படுகிறது. இதைச் செய்ய நான்குபேர் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து வேலை செய்கிறார்கள்.

ஆனால், கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது என்று நாம் சிந்தித்திருக்க மாட்டோம்.

மிருகங்கள் தொழுவத்தில் இயேசு பிறந்த காட்சியை உலகிலேயே முதன்முதலாக அமைத்தவர் புனித பிரான்சிஸ் அசிசியார்தான் (1181-1226). இயேசுவைப்போலவே வாழவேண்டும், அவர்போலவே ஏழையாயிருக்க வேண்டும், அடக்கம், தாழ்ச்சி, பணிவு நிறைந்தவராய் இருக்கவேண்டும் என மனதிற்கொண்டு வாழ்ந்தவர், அப்படிப்பட்ட வாழ்வு வாழவே ஒரு சந்நியாச சபையை நிறுவவேண்டும் என உறுதி கொண்டிருந்தவரும் அசிசி நகர் பிரான்சிஸ்தானே. தான் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் – 1223ல் – புனித பூமிக்குச் சென்று இயேசு பிறந்து வாழ்ந்து மரித்த இடங்களைப் பார்த்திருந்தார் இவர். எனினும், சிலுவைப்போரின் காரணத்தால் போர் மூழலாம் என்ற பதற்றநிலையில் திருச்சபை அதிகாரிகள் திருப்பயணிகள் தங்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும் எனச்சொல்லிவிட்டார்கள். உடனே இவர் தன் நாட்டுக்கு – இத்தாலிக்கு- த்திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். எனவே, இயேசு வாழ்ந்த இடங்களில் இருக்க முடியாத சூழ்நிலையில், இயேசுவின் வாழ்க்கைக் காட்சிகளையாவது நாம் அமைத்தால், இயேசுவின் நினைவு நமக்கு அடிக்கடி வரும் என்ற எண்ணம் அவரிடம் உதித்தது.

கிறிஸ்து பிறப்புவிழா அண்மித்திருக்கும் நாட்களில் இத்தாலியின் மையப்பகுதியில் உள்ள க்ரெச்சோ (Greccio) எனும் சிற்றூரில் இருந்தார். இயேசு பிறந்த காட்சியை பெத்லெஹெமில் இருந்தது போலவே இவ்வூரில் அமைக்கலாமே என்று அவர் மனதில் பட்டது. அக்காலகட்டத்தில், கிறிஸ்து பிறப்பு விழாதிருப்பலியில் குழந்தை இயேசுவின் உருவத்தை மெழுகில் அமைத்து மிக அழகாக உடையுடுத்திக் காட்சிக்கு வைப்பதுதான் வழக்கம். உயிருள்ள மனிதரையும் மிருகங்களையும் வைத்துக் காட்சிப்படுத்தினால் மக்கள் மனத்தில் நன்றாகப்பதியுமே என்று நினைத்தவராய் போப்பாண்டகை ஒனோரியசிடம் அதற்கான ஒப்புதலையும் பெற்றார் புனித பிரான்சிஸ். (இந்தப் போப்பண்டகைதான் இதே 1223ல் தொமினிக்கன் சபை, அசிசியாரின் பிரான்சிஸ்கன் சபை மற்றும் கார்மேல் சபைகள் இயங்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ உத்தரவு கொடுத்தவர்.)

க்ரெச்சியோ ஊரையொட்டிக் குகை போன்ற ஒரு பாறையைக் கண்டு பெத்லெஹெம் ஊரருகே கிறிஸ்து பிறந்த மாட்டுத்தொழுவம்போன்றே உள்ளது எனக்கண்டார். தனக்கு மிக அறிமுகமான பணக்காரர் ஆனால் உத்தமர், தன் மூன்றாம் சபையிலும் ஓர் அங்கத்தினர், ஜோவான்னி வெலீத்தா என்பவரை அணுகிக் கிறிஸ்து பிறப்பு “உயிர்” காட்சிக்காக ஒரு மாடு, ஒரு கழுதை, ஓரிளம் ஆண், ஓரிளம் பெண்ணை ஒழுங்கு செய்யுமாறு கேட்டார். அருகிலேயே கிடைத்த காய்ந்த புற்களை வைத்து ஒரு தீவனத்தொட்டியை அமைத்தார். இத்தொட்டிக்கு இருபுறமும் “மரியா” “சூசை”யை நிறுத்தினார். அதுபோலவே மாடும் கழுதையும். இடையே, குகையைச் சுற்றி இருந்த புல் வெளியில் மிருகங்கள், இடையர்கள். நடு நாயகமாகத் தீவனத்தொட்டியில் மெழுகில்செய்யப்பட்ட குழந்தை இயேசு. இதைப்பார்த்த மக்கள் சிறுசிறு விளக்குகளையும் எரியும் திரிகளையும் கொண்டுவந்து வைத்ததால் அது உண்மையான பெத்லெஹெம்ஊர் மிருகங்களின் தொழுவத்தில் இயேசு பிறந்திருப்பது போலவே பட்டது. நள்ளிரவு திருப்பலியில் தியக்கோனான பிரான்சிஸ் உருக உருக மறையுரையாற்றினார். அவரிடமிருந்த பக்தி மேலீடு அனைவரிடமும் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இயேசுவின் பெயரைக்கூட உச்சரிக்கத் தகுதியற்றவராகத்தன்னை உணர்ந்து அவரை பெத்லெஹெம் பாலன் என்றே குறிப்பிட்டார்.

திருப்பலி முடிந்த பின்னர் குடிலில் இருந்த காய்ந்த புற்களை மக்கள் வீடுகளுக்கு எடுத்துசென்று நோயுற்றோருக்குக் கொடுத்து அவர்களும் குணமானார்கள் என்று ‘புனித பிரான்சிஸ் அசிசியார் அமைத்த உலகின் முதல் கிறிஸ்துமஸ் குடில்’ பற்றி ப்ரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த புனித பொனவென்ச்சர் (1221-1274) எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் தொடங்கியது கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் வழக்கம். அது சரி, மிருகங்களின் தொழுவத்துக் குடிலில் கிடக்கும் குழந்தை இயேசு நம் நெஞ்சில் குடி கொள்வாரா?

Recent posts

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

விண்ணகத்தின் அப்பம், மண்ணகத்தின் இரட்சிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசத்தின் மையத்திலும், உச்சத்திலும் இருப்பது நற்கருணை (The Holy Eucharist) ஆகும். இது வெறும் அடையாளமல்ல; இது ஒரு நபர். இது வெறும் அப்பமல்ல;...
Thamil Paarvai

இறைவனின் கடிதம், மனிதனின் வரலாறு

ஒரு தந்தை தனது மகனுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் தனது அன்பை, தனது அறிவுரைகளை, தனது வாக்குறுதிகளைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தக் கடிதம் மகனுக்கு வழிகாட்டியாக,...
Thamil Paarvai

புதிய மோசேயின் பிரகடனம்

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம் மத்தேயு நற்செய்தி ஆகும். திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே, இந்த நற்செய்தி மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும்...
Thamil Paarvai

பூமியில் வாழும் விண்ணின் அரசியலமைப்பு

உலக வரலாற்றில், ஒரு மனிதரின் சொற்கள் இவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவு, சாக்ரடீஸின் விசாரணை, கன்பூசியஸின் ஒழுக்கம், புத்தரின் இரக்கம் – இவை அனைத்தும்...
Thamil Paarvai

Leave a Comment