ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் இதுகுறித்து கூறுகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தபின்னர், ஓட்டலுக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அடுத்தடுத்து சீட்டில் அமர்ந்திருந்தோம். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரை பார்த்தேன். அந்த சூழ்நிலையில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒருவருக்கொருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. நாங்கள் எதிர்பார்த்தது இது அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒன்றாக இணைந்தோம். மிகவும் கடினமான வகையில் வலைப்பயிற்சி எடுத்தோம். சிறப்பாகவே தயாரானோம். அணி சரியான பேலன்ஸ் கொண்டதாக உணர்ந்தோம். நாங்கள் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளோம். மூன்றிலும் தோல்வி. மற்றொரு மோசமாக சீசனாக அமைந்துவிடுமோ என்று எங்கள் அணி ரசிகர்கள் கருதுகிறார்கள். இன்னும் 11 லீக் ஆட்டங்கள் உள்ளன. ஐபிஎல் வரலாற்றின்படி 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அல்லது குறைந்த பட்சம் 7 போட்டிகளிலாவது வெற்றிபெற வேண்டும். ஆர்சிபி உடனடியாக வெற்றிக்கு திரும்ப வேண்டுமென்றாலே, ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். எங்களது உடனடியான வேலை, அணிகள் மீது நம்பிக்கை வைக்காமல் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு. ஆனால், பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளர் கடினமான நேரத்தில் எங்களுக்காக கடுமையான போராட வேண்டும். அவர்களுடைய சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.
previous post
Recent posts
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும்...
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..
ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...




