உலகம் செய்திகள் புதிய செய்திகள்

காதலியின் மோசமான செயல் : 4 வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த காதலன்

காதல் கணவனை 4 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தான், பிரித்தானியாவில் நாங்கள் இதுவரை சந்தித்ததில் மோசமான ஒரு வழக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பிபிசி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அதில், இங்கிலாந்தை சேர்ந்த பொலிஸார் தான் சந்தித்த மிகவும் மோசமான ஒரு வழக்கு குறித்து பேசியிருந்தார்.
அலெக்ஸ் ஸ்கீல் என்கிற 22 வயது இளைஞர் தன்னை விட வயதில் மூத்த பெண்ணான ஜோர்டான் வொர்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே, தினமும் வீட்டிலிருந்து கதறும் சத்தம் கேட்டுள்ளது. பல நாட்களாகவே இதனை கேட்டு வந்த பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வீட்டின் கதவை தட்டியதும் வேகமாக வந்து திறந்த ஜோர்டான் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய கணவர் தன்னை தானே தாக்கிக்கொள்கிறார் என கூறியிருக்கிறார்.
உடனே மேல் தளத்திற்கு சென்ற பொலிஸார் வீடு முழுவதும் ரத்தக்கறை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அங்கு உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அலெக்ஸ் ஸ்கீலை மீட்டு வேகமாக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இந்த காயங்கள் அனைத்தும் வேறு ஒருவர் தாக்கியிருப்பதை போலவே இருக்கிறது என பொலிசாரிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் அலெக்ஸ் ஸ்கீலிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், உங்கள் மனைவியால் ஏதேனும் தாக்குதல் நடத்தப்படுகிறதா என கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து, இல்லை நான் தான் என்னை தாக்கிக்கொள்கிறேன். அதற்கான காரணம் தெரியவில்லை என கூறியிருக்கிறார்.
அவரது வார்த்தை மீது நம்பிக்கை வராத பொலிஸார், அன்று முதல் நோட்டமிட ஆரம்பித்துள்ளனர். சில நாட்கள் கழித்து மீண்டும், பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு போன் செய்துள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்த பொலிஸார், அலெக்ஸை கண்டதும் பதறியுள்ளனர்.
காரணம் என்னவென்றால், கதவை திறந்த அலெக்ஸ் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் நின்றுகொண்டிருந்துள்ளார். எந்த சிகிச்சையும் பெறாமல் அவை அனைத்தும் நாள்பட்ட காயங்களாக மாறியிருந்தது. அந்த சமயம் மீண்டும்இ உங்கள் மனைவி கொடுமைப்படுத்துகிறாரா? என பொலிஸார் கேட்டுள்ளார்.
அப்பொழுதும் மனைவியை காட்டிக்கொடுக்க அலெக்ஸ் மறுப்பு தெரிவித்து மிகவும் கூலாக மருத்துவமனை செல்லலாம் என கூறியுள்ளார்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்இ இன்னும் 10 நாட்கள் தாமதித்திருந்தால் கூட உயிர் பிழைத்திருப்பது கடினம் என கூறியுள்ளார்.
அதன்பிறகே வாய் திறந்த அலெக்ஸ், என்னுடைய மனைவியுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம், தலை சீவும் பொருளை கொண்டு தாக்குவார். முதல் 3 வருடங்கள் மன ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளானேன். ஆனால் அதன்பிறகு உடல் ரீதியிலான தாக்குதல்களை அனுபவித்தேன்.
இரவு முழுவதும் தூங்கவிடாமல் சுடுதண்ணீரை மேலே ஊற்றி கொடுமை செய்வார். அது குளிர்ந்து விட்டால்இ மீண்டும் சூடு செய்வார். ஒரு சில நேரங்களில் கத்தியை கொண்டு என்னை குத்துவார். நான் பயந்து போய் மேல் தளம் அல்லது கழிவறைக்கு சென்றுவிடுவேன். உணவு சரியாக கொடுக்க மாட்டார்.
அவர் கூறும் ஆடையை தான் நான் உடுத்த வேண்டும். இதனால் என்னுடைய எடை அதிகமாக குறைந்துவிட்டது. அவர் எதுவும் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் யாரிடமும் கூறவில்லை என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் ஜோர்டான் வொர்த்தை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி 7 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பிரித்தானியாவில் ஒருவரை கட்டுப்படுத்தி கொடுமைப்படுத்தியதற்காக தண்டனை பெறும் முதல் பெண் இவர் தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment